பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன் அெ திருஇசைப்பா ஒளினெறி கட்டுரை 25-10. மயிலை மறைவல ஆலி சொன்ன சொல்லே மகிழ்ந்தேத்த வான் எளிதாகும். பதிகம் 26 புருடோத்தமகம்பி கோயில் 26.1. கச்சணிந்த அழகிய முலைகள் மெலிந்து போகும்படி செண்பக மலர் மாலையும், மாலைக்காலமும் எம்மை மயக்குகின்றன. கூத்தப்பிரான் அருள் புரிய வரமாட்டார். வேறு யார் எனக்கு அருள் புரிந்து அஞ்சாதே! என்பவர் (ஒருவருமிலர்). என்னுயிர்க்குக் காப்பாக உள்ளது எனது அன்பு ஒனறேதான். 26.2. என் மனம் மெல்லப் போய் சிவபிரானிடத்திலே சேர்கின்றது. வேறு ஆதரவு இல்லாமையால் ஏற்பட்ட சோர்வையும் உறுதியின் அழிவையும் என் உயிருக் குண்டான வருத்தத்தையும் யார் அறிவார் ? 26-3. தேவர்கள் நெஞ்சமஞ்சி வலிய பழிகாரர்களாய் விடத்தை உண்ணச் செய்தார்கள். நான் உய்ய மாட்டேன் அந்தத்தேவர் கூட்டத்தை விலக்கி என் பசலே நீங்கும்படி எங்கள் விதியூடே எழுந்தருள வேண்டுகின்றேன். 26.4. கங்கை சூடிய சடையினனே! எங்கள் வீதியூடே எழுந்தருள்க ! உன் குழையணி காதில் மாத்திரை முதலிய என் மனத்தைக் கொள்ளே கொள்கின்றன. அதல்ை என் ஆருயிர் அழுந்துகின்றது. நான் என் செய்வேன் ? 26-5. பெருமானது மலரடிமீதுள்ள என் ஆசை யினுல் பெண்களின் முன்பு எனது பெண்மைக் குணங்களே கான் இழந்துவிட்டேன். 26-6. பெருமானே! நீ சுடுகாட்டில் இருளில் திரு கடனத்தை ஆடிக் கொண்டிருந்தால் இவ்விடத்தில் உள்ள எங்களுடைய அரிய உயிரைக் காப்பது அரிதே ஆகும். 26.7. தில்லைவாணனே தேவர்கள் குறை வ்ேகியவர்கள் ஆனர்கள். மாதர்களாகிய எங்களுக்குத்(தான்) இனி வாழ்வு அரிதாகும்.