பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அகப்பொருட் பகுதி சித்துச பதிகம் 28 சேதிராயர் : கோயில் இப் பதிகம் 'கற்ருய் கூற்ருக' அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. 28.1. தில்லைப் பெருமானே !! நெடுநாள் உமது அருகில் இருந்ததால் என் மகளுக்கு ர்ேவிடத்தை உண்டு மகிழ்ந்திர் என்று காதல் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 28.2. தில்லையுளிர் ! என் பெண் உம்மீது மயக்கம் கொண்டு காணத்தை இழந்தனள். உம்மை அவள் கண்டால் துன்பம் நீங்கியவள் ஆவாள். 28.3. தில்லையாய் !" என்று என்னுடைய பெண் விம்மி அழுகின்ருள். ஆதலால் அவளுக்கு அருள் செய்விராக ! 28-4. தில்லைப் பெருமானே !! விம்மி விம்மி அழுது உம்மையே கினேந்து என்னே யாட்கொள்வாய்” என்று சொல்லித் துதிக்கின்ருள். ஒன்றுக்கும் பயன்படாதவளாய்ச் சோர்வுறுகின்ருள். 28-5. தில்லைப் பெருமானே! உம்மீது ஆசைகொண்ட எனது பெண் சோர்வுற்றுக் கை கூப்பித் தொழுது, ஐயோ! கான் உய்யும்படி உனது கொன்றை மாலேயைத் தந்தருளாய் ! என்று கூறுகின்ருள். 28-0. தான் வளர்க்கும் கிளியைப் பார்த்து என் பெண் 'விெயே ' ,ே 'தனது தேகத்தில் தேவிக்கு $»Gb பாகம் கொடுத்தவர். கொன்றை மாலையை அணிந்த மார்பை உடையவர்' என்று கூறுவாயாகில் நான் பிழைப்பேன் என்று கூறுகின்ருள். 28-7. பெருமானே இளம் பெண் யானே போன்றவ. ளான எனது பெண்ணே என்ன செய்து விட்டீர் ர்ே செய்த இந்த மயக்கம் எப்பொழுது நீங்கும் ? 28–8. .தில்லைப் பெருமானே ! தரும வடிவினனே f அருச்சுனன் பொருட்டுப் பன்றியின் பின் சென்ற வேடனே! என்னே வருத்தாதே, என்று என் மகள் அரற்றுகின்ருள். தி. இ. ஒ. க.-7