பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

di Oro திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 8. என்னுள்ளத்தை உருக்கி, தேன் ஊறச் செய்த அருட்பெருமான் தில்லைச் செல்வர். இவர் பாதாதிகேசப் பதிகம் பாடியுள்ளார். (பதிக எண் 2) அப்பதிகத்தில் பெருமானுடைய சேவடியைத் தன் மனத்துள் வைத்தருள் வாய் என வேண்டுகின்ருர். அவரது திருவடிக்கீழ் தன்னுயிர் உளது என்கின்ருர். 1. பெருமானுடைய கணக்காலைத் தன் கெஞ்சு எப் போதும் கினேக்கின்றது. 2. பெருமானுடைய குறங்கில் (தொடிையில்) தன் அனுடைய மதி புதைந்துள்ளது. 3. பெருமானுடைய ஆடைக் கச்சுநூல் தனக்கு ஆதரவு 4. பெருமானுடைய திருவயிற்று உந்தி வகிளப்பு தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்கின்ருர். 5. பெருமானுடைய உதரத்தனிவடத்தில் (வயிற்றில் தொங்கும் மணி மாலையில்) தன் உணர்வு கிலேத்திருக் கின்றது. 6. பெருமானுடையப் பவளவாய்ச் சோதியுள் தன் அறிவு அடங்கிக் கிடக்கின்றது. 7. பெருமானுடைய செங்கமல மலர்முகத்தில் தன் கருத்து கலந்திருக்கின்றது 8. பெருமானுடைய சென்னியில் செஞ்சடையில் உள்ள நிலவும், புதுமத்தமும் தன் சிந்தையில் நிறைந்துள்ளன. திருமாளிகைத் தேவரும் பூதகணங்களும் (சிவ கணங்கள்) சிற்றம்பலக் கடத்தனே! என்னுடைய புன்சொல்லின் பொருளே உன் திருவடிக் கீழுள்ள புராண பூதங்கள் (பழைய அடியார்கள்) பொறுத்தருள்வர்.