பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடிைேர்ப் பகுதி அ0 தி" திருப்பல்லாண்டு பதிகம் 29-7 ஆம் பாட்டில், 'சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடி கீழ் ஆரும்பெருத அறிவு பெற்றேன்' எனக் கூறி மகிழ்கின்ருர். இத்தகைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சுந்தரர், 'மற்றுயான் பெற்றது யார் பெறவல் லார் வள்ளலே' எனக் கூறுவதை வடதிரு முல்லைவாயிற்” பதிகத்திற் (69-6) காணலாகும். பிற ஒளிநெறியிற் காண்க 2. சேந்தனுரும் சிவனும் பதிகம் : 5 (திருவிழி மிழலை) 1. திருவிழி மிழலையில் கோயில் கொண்டிருக்கும் சிவபியா ஃனத் தவிர வேறு ஒரு தெய்வம் உண்டு என்று நான் அறிகிலேன். அவரைக் கண்டு என் உள்ளமும் கண்க ளும் குளிர்ந்தன. அவரைக் குறுக வினே குறுகாது. அவர் பொன்னடித் திருகிறணிந்து அடிமை பூண்டேன். இனி அவ ரைப் போகவிடேன். பொய்த் தெய்வ நெறியில் நான் புகா வகைபுரிந்த சிந்தாமணி அவர். கனப்போன்ற செல்வத்தை வேண்டி ஐம்புலன்களால் அழுந்தி நான் வேதனைப்படா வண்ணம் காத்து என்னே ஆண்ட புனிதன் அவர், மங்கை ஒர் பாகத்து அரு மருந்து அவர் அவரை நான் இனி மறவேன். எண்ணில் பல்கோடி குணத்தர் அவர் அவர் கம்மை ஆளுடையார் நான் அவரை நெஞ்சார அழைத்தால் அவர் வராதிருக்கமாட்டார். ஆல்ை கற்பகம் போன்ற அவரை அடிைதற்கு நான் எவ்விதத் தகுதியுடையேன் ?