பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடினேர்ப் பகுதி ஆகக சிற்றம்பலத்துப் பெருமான் தான் எனக்கு அருள் செய்பவர். தாயின் நேர் இரங்கும் தலைவன் என்றும், தமியனே துணைவன் என்றும் நாயேன் புலம்பில்ை அவர் தான் எனக்கு அருள் புரிபவர். கண்ணிர் அரும்பக் கைகள் மொட்டிக்க என் களைகனே ஒலம் என் அறு ஒலமிட்டு உருகும் அன்பர் கூட்டத்தில் என்னேயும் சேரும்படி செய்தவர். என் இடர் அகல என்னகம் புகுந்து என் அஞ்ஞானத்தைப் போக்கிப் பளிங்குபேர்லத் தோற்றத்தையுடைய, பெருமான் என் புந்தியில் புகுந்தார். தனது செஞ்சடையையும், பிறையை யும், கருணையையும் காட்டி எனக்கு அருள் புரியும் பரமர் அவர். பதிகம்-9 :-(களந்தை ஆதித்தேச்சரம்) என்னேப் பெற்றெடுத்த தாயினும் நல்லவர் முக்கட் பெருமான். பாவியேன் செய்யும் பிழைகளேப் பொறுத்தார். ஆனல் எனக்குள்ள பிணியைப் பொறுத்தருளாத பிச்சர் அவர். என் குடி முழுதாளும் குழகர் அவர். கடா அனேய என்னே ஆள விரும்பிப் பிறிதொரு பிறவியிற் பிறந்து நான் பொய்க்கு ஆள் ஆகாத வண்ணம் என்னேக் காத்து அருள் புரிய வல்லவர் பெருமான். கருவூரன் ஆகிய நான் வேதம் பயின்று அமுதம் ஊறிப் பாடிய தமிழ்மாலே பத்தும் வல்லவர் அஞ்ஞானத்தைத் தொலைத்த சிந்தையர் ஆவார். பதிக எண் : 1.0 (கீழ்க்கோட்டுர் மணியம்பலம்) (அகப்பொருட் பதிகம்) வேதம் பிதற்றும் பித்தகிைய நான் மொழிந்த மாலை முத்திதரும் என்று உலகத்தவர் ஏத்துவரேல் அவர் தமை இலக்குமி முகம் மலர்ந்து எதிர்கொள்வாள். (ஆரணம் பிதற் அறும் பித்தன் என்றபடியால் கருவூர்த் தேவர் அந்தணர் என்பது பெறப்படும்.)