பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடினேர்ப் பகுதி நிதிஅத் தெரிவிக்கின்றது. இரண்டாம் பதிகம் (19) கோயில் தில்லைப் பெருமானுடைய நடனத்தைப் பற்றிக் கூறுகின்றது. காடநம்பியும் சிவனும் 18-2. இப்பாடலில், பெருமானுடைய அழகைப் பாருங்கள் எனத் தேவர்களே அழைத்துக் கூறுகின்ருர் ஆசிரியர். 19. கோயில் “கணம் புல்லர்," "கண்ணப்பர்; “காவுக்கரசர்;" "சம்பந்தர்;" சேரமான், ஆரூரன், இவர்களைப் பற்றி ஆசிரியர், பாடல் 2-முதல் 5-வரை கூறியுள்ளார். -ேஆம் பாலில், 'சிவலோகம் ஆவதுவுங் தில்லைச் சிற்றம்பலமே' -- எனச் சிற்றம்பலத்தைச் சிறப்பித்து உள்ளார். இறுதிப் பாடலில் பெருமானுடைய ஆடல் அதிசயத்தைக் கூறுகின்ற காடருடைய தமிழ் மாலேயின் கருத்து அறிந்து இசையுடன் பாட வல்லவர்கள் மோட்ச கிலேயை அடைவார்கள். 5. கண்டராதித்தர் (கோயில்) பதிக எண்-20 ΘΥΙΤ6\)ΠΤΗΝ : இவர் சிற்றம்பலத்திற்குப் பொன் ஒடு வேய்ந்து புதுப் பித்த “முதற் பராந்தக சோழன்' குமாரர். சோழ நாட்டை ஆண்டவர். சிறந்த சிவபக்தர். தேவாரத்தில் ஈடுபாடு உடையவர். இவரைச் 'சிவஞான கண்டராதித்தர்' என ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கண்டராதித்தரின் மனேவியார் 'செம்பியன் மாதேவியார்'-இந்த அம்மையார் சிவத் தொண்டிலும் சிவபக்தியிலும் சிறந்தவர்.*

  • இவரைப் பற்றி, புலவர் ஏறு. மு. அருணசலம். எம். ஏ. அவர்கள் சிங்தாக்தம் (மே - 1970) ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை போற்றத்தக்கது.