பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ.ெ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 7. திருவாலியமுதனுர் பதிக எண்-22-25 (கோயில்) 6һJT6A.JPTRTT] :— இவர் மயிலொடுதுறையான மாயூரத்திலே அந்தணர் குடியில் வந்தவர். சீகாழிக்கு அருகில் உள்ளது ஆலிநாடு. அங் காட்டிற்குத் தலைமை ஊர் திருவாலி. அங்குள்ள திரு . மாலுக்கு 'அமுதனர்” என்று பெயர். இவருடைய பெற்ருேர்கள் இவருக்கு 'திருவாலியமுதனர்' எனப் பெயரிட்டார்கள். வைணவக் குடியில் தோன்றிய இவர் சைவ அடியவரால்த் தில்லேக் கூத்தரைத் தம் குலதெய்வமாகக் கொண்டிார். அவரைச் சேர்வது என்று கொலோ என எங்குவர். இவர் பாடிய நான்கு பதிகமும் கோயிலுக்கே. இவர் தம்மை,

'மயிலேயர் மன்னன்' என்றும் 'மறைவல திருவாலி' என்றும் தாம் பாடிய பாட்டில் கூறியுள்ளதால் இவரூர் மாயூரம் என்பதும், இவர் அந்தணர் என்பதும் பெறப்படும். இவரைப் பற்றிய பிற விவரங்கன் “திருப்பனந்தாள்' பதிப்பில் காணலாம். பதிக எண்: 22 பாதாதிகேசம் தில்லை அம்பலத்தானுடைய பாதம் என் சிங்தையுள் இடங்கொண்டது. அவருடைய கழல், சிலம்பு, கிண்கிணி இவை என் சிந்தனையில் இடங்கொண்டன. அவருடைய குறங்கு (தொடை) என் சிந்தையுள் இடங் கொண்டது. அனருடைய கச்சு என்னே வாழ்வித்தது. அவருடைய மேனியும், திரு வயிறும், உந்திவான் சுழி யும் உதரபந்தனமும் என்னுள்ளத்துள் இடங்கொண்டன.