பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை تrھE{PL کیپ "மாசிலா மறைபல ஒது காவன் வண்புருடோத்தமன்" எனக் கூறுவதால் இவர் அந்தணர் என்பது பெறப்படும். 26.11. வேதம் ஒதும் கம்பியின் பாடல்களைக் கொண்டு இறைவனைத் துதிக்க வல்லவர் சிவபெருமானே அடைந்து இன்பு:அறுவர். பதிக எண்: 27 27.11. புருடோத்தம நம்பி பண்ணுேடு பாடிய பாடல் களைக் கற்றுப் பாடியவர் சிவலோகத்தில் இன்பத்துடன் வாழ்வர். 9. சேதிராயர் : (கோயில்) பதிக எண்: 28 ബTബIT ) ; இவர் சேதி காட்டை ஆண்ட குறுகில மன்னர். இவர் சேதிராயதேவர் எனவும் படுவர்; சேதியர் ஒருவிகை மரபினர். சேதிநாடு தென்னுர்க்காடு மாவட்டத்தின் வடமேற்கிலுள்ள நடு நாட்டின் ஒரு சிறுபகுதி. சேதி நாடு மலையமா நாடு என்றும் வழங்கப்பெறும். கிளியூரைத் தலைநகராக்கிக் கொண்டு அரசாண்டவரே சேதிராயர். இவர் அடியார் பத்தி, சிவபத்தியிற் சிறந்தவர். 28.10. சேதிபர்கோன் தில்லைக் கூத்தரை உரை செய்த பாடல்களைத் தூய்மையுடன் உரைப்பவர் மோட்ச வீட்டில் இன்பம் எய்தி இருப்பர்.