பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி 454Fin E.T. (2) கின்னரங் கலந்தொலிப்ப மந்திரகீதத் ங்ேகுழ லோசை எங்கும் எழுந்தது திருவிடை மருஅாரில். குழல் ஒலிமிக்க எழுந்தது திருவாரூரில். (3) குழல் ஒலி, யாழொலி முழங்க பரமன் கடம் புரிந்தனர். தேர் விழாவில் குழல் வாசிக்கப்பட்டது. (4) சகடை (ஜயகண்டையின்) பேரொலியும், சங்கத் தின் முழக்கும் கீழ்க்கோட்டுரில் கேட்கப்படும். (5) தமருகம் (துடி) ஒலியும், யாழொலியும், வீணே யொலியும் கேட்கப்படும் கீழ்க்கோட்டுர். (6) துடி, துந்துபி, குழல், யாழ், மொங்தை இவை ஒலிப்பப் பரமன் கடம் புரிவர். (7) பறை ஒலிக்கப் பன்றியின்முன் ஓடினர் பேருமான். (8) கந்தி கையால் முழவம் வாசிக்கப் பெருமான் கடம் புரிவர். (9) தஞ்சையில் மகளிர் தத்தம் மாளிகையில் இரவில் விரலினல் யாழொலி மீட்டி இனிய இசையை எழுப்பினர். (10) நரம்புகளே உடைய வீணே கொண்டு இசை எழுப்புவர். 193. விசயனும், சிவனும் (196) வில்லும் அம்பும் எடுத்துக் கொண்டு காலில் செருப் புடனும் கையில் கத்தியுடனும், புலித்தோல் உடையுடனும் மகேந்திரமலை அருகே பன்றிப் பின் வேடகை உமாதேவி காணச் சென்றனர் பெருமான். குறிப்பு:-அருச்சுனர் சிவனே கோக்கித் தவம் செய்த போது 'மூகாசுரன்" என்னும் அசுரன் ஒரு பன்றி வடிவாய் அவனேக் கொல்ல வந்தான். அப்போது சிவன் வேடகை வடிவுகொண்டு வந்து மூகாசுரனேக் கொன்அறு அருச்சுனனைக் காத்தனர்.