பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை தமது திருவடியைப் பணிந்த அந்த அந்தணசி சிறுவன் பொருட்டுக் காலனே உதைத்தருளினர். அதனல் 'கால காலர்' எனப்பட்டார் இறைவர். பின்னர் அக்கால அணுக்குத் திரு அருள் பாலித்தார். | (3) சலங்தானைத் தடிந்தது (2 - 3) சலந்தரனுடைய வரம்பு கடந்த அகந்தை அழியும்படி சக்கரப்படையால் அவன் அறுபட்டு இறக்கும்படி செய்தார் இறைவர். * (4) தக்கன் வேள்வியை அழித்தது (2 - 4) தக்கன் செய்த வேள்வியில் தலைவய்ை இருந்த எச்ச ஆணுடைய தலை விண்டு உருளும்படி செய்வித்தார் இறைவர். தக்கனுடைய தலையும் விண்டு உருளும்படி கோபித் தளித்தார் இறைவர். - வேள்வியில் தண்டனை அடைந்தவர்கள் தக்கன், பிரமன, சூரியன், சந்திரன், இந்திரன், எச்சன், தேவர்கள். இவர் தம்முள் தக்கன், பிரமன், எச்சன் இவர்க ளுடைய தலையும் ஒரு சூரியனுடைய (பூடா) என்பவனுடைய பற்களும், பகன் என்னும் சூரியனுடைய கண்களும் பறிக்கப்பட்டன. சந்திரன் காலால் தேய்க்கப்பட்டான். குயில் உருவம் எடுத்துப் பறந்து ஒட கினைத்த வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் யாவரும் எழுந்து ஒடிக்கெடும்படி செயி தார் இறைவர். --