பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை மால்கரி ஈருரித்தெழு போர்வையினிர்' என்கின்ருர் ஆசிரியர் திருவாலியமுதனர். “மால்கரி' என்பதற்குப் பெரிய யானே என்பது ஒரு பொருள். மாலின் ஈருரி, கரியின் ஈருரி எனப் பிரித்தும் பொருள் காணலாம். மாலின் ஈருரி என்பது 'வாமன அவதாரத்தில் திருமாலின் தோலே உரித்துப் பைரவமூர்த்தி சட்டையாகத் தரித்தார் என்பது ஒரு வரலாறு. (8) அந்தகாசுரனை அட்டது (2-8) இதுபற்றி ஒன்றும் திருஇசைப்பாவிற் கூறப்பட வில்லை. 3. சிவபிரானைக் குறிக்கும் அடையாளங்கள் (3) (1) இடது பாகம் கருகிறம். மற்ருெரு பாகம் சிவப்பு. கழுத்திலொரு தனி மாலை. அவர் ஒருவர். ஆல்ை இருவர். ஒர் உடம்பினர். கண் மூன்று. தடங்கோள் நான்கு. மறைகள் தேட அரியர். இப்படிப்பட்டவரின் இருப்பிடம் களங்தை ஆதித்தேச்சரம். .گیي (2) திருவாய் குமுதமலர். கழுத்து குவளே மலர் இருசெவிகளில் குழைகள். ஒரு பக்கத்தில் மேகலாபரணம். சடைமேல் நல்லபாம்பு. பிரகாசிக்கும் திருமுகமும், திருக் கண்களும் செந்தாமரை மலர். பாதக்குறடுகள் பொன் னிறத்தன. குணத்தின் தன்ம்ை பரிசுத்தமானது. இத் தன்மையரின் இருப்பிடம் களங்தை ஆதித்தேச்சரம். (3) திருமேனியில் சந்தனமும், வெண்அேம் விளங்கும் கெருப்புப்போன்ற திருஉருவத்தில் கெற்றிக்கண் விளங்கும். இப்படிப்பட்டவரின் இருப்பிடம் களங்தை ஆதித்தேச்சரம்.