பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை -پAR ளிைறம். பற்கள் வெண்ணிறம். மேனிமேல் உள்ள பாம்பு வ8ளந்து கிடக்கும். இடை அடிபோன்றது. அவ்விடையில் மேகலை, ஆடை ஒரு புறம், இடது பாகத்தில் ஒருத்தி உள்ளாள். இங்ஙனம் இருப்பவரின் உறைவிடம் களங்தை ஆதித்தேச்சரம். (10) பழைய தொண்டர்களுக்கு எளியர். மிண்டர் களுக்கு அரியர் எனக்குள்ள பிணியை என்மீது அருள் வைத்து நீக்காதவர். குழைகளாக விஷப்பாம்புகளே அணிக் தவர். என் (கருவூரரின் குடிமுழுதாளும் குழகர். கங்கையை அணிந்த அழகர். இப்படிப்பட்டவரின் உறைவிடம் களங்தை ஆதித்தேச்சரம். (11) கழுத்தில் ஆரம் பாம்பு. பிசிசைப் பாத்திரம் கபாலம் (மண்டை ஒடு) பட்டத்து யானே எருது. அன்ப ருடைய கண்ணிர் அவர் திருமஞ்சனமாடும் இடம். தேவி மலைமகள். பூசும் சந்தனம், திருஅேறு, இசைப்பாட்டு அரு மறை. முடி சடை. இவ்வாறு கொண்டவர் சாட்டியக்குடிப் ப்ெருமான். (12) மெய்யர்க்கு மெய்யர். சோதி வடிவினர். உமை உள்ள பாகம் கறுப்பு கிறம். பிச்சைக்குத் திரிபவர். சுடு காட்டில் வாழ்பவர். பொய்யர்க்குப் பொய்யர். அஞ்ஞான இருளை நீக்கும் குருமூர்த்தி. இப்படிப்பட்டவரின் உறை விடம் களங்தை ஆதித்தேச்சரம். (18) உண்ட விஷத்தின் கருமையும் திருற்ேறின் வெண்மையும், திருமேனியின் செங்கிறமும், கரியையும், றுேபூத்த நெருப்பையும், ஒத்து விளங்கும் கழுத்திலே ஒப்பற்ற ஒற்றை வடத்தை அணிந்து எல்லாமாய்த் தோன்றி கிற்கும் அழகு உடையவர் திருமுகத்தலே என்னும் தலத்தில் விற்றிருக்கும் பெருமான். (14) பிறை தவழும் சடைமுடியும், . இருபுறத்தில் காதில் குழையும், கழுத்தில் கருகிறமும், சிவந்த வாயில் புன்சிரிப்பும் கொண்டவர் இடம் சாட்டியக்குடி.