பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& Q- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை ஊழி காலம் பரவிக் கிடந்தும், பணிந்தேத்தியும் காண முடியாத எரியுருவாய் கின்றவர் பெருமான். அவர் திருவடியைக் காண ஊழிதோறுாழி உளங்கசிந்து கெக்கு கைந்து பன்றியும், பறவையுமாய்த் தேடி உருகிகின்றும் காணமுடியாத பெருமையுடைய தழற் பிழம்பர் பெருமான். அவரது திருவடியைத் திருமால் காண்கிலன். அவர் திருமுடியைப் பிரமன் காண்கிலன். ஆதலால் இருவரும் மறைகொண்டு இன்னமும் இறைவனேத் அதித்து கிற்கின்றனர். 11. சிவபிரான் உலாவும் (பவனியும்) (12) கையில் முத்து வ8ளகள், கழுத்தில் தனிமாலே, முக்கண்கள் இவைதமை உடையவராய்த் திருவாரூரில் வீதியில் எழுந்தீருளும் விடங்கராய் நடம் செய்யும் அழகிய தோற்றம் உமாதேவிக்கும், கங்காதேவிக்கும் சிறிதும் கிடையாது. சடா மகுடத்தில் வெண்ணிலா விளங்க, முத்துக் குடை கிழலில் இடப வாகனத்தின்மேல் உலா வரும்போது கண்ட குறிப்பு யாது. | 12. சிவபிரான் உறைவிடம் 13) = * •. o 1. அன்பர் உள்ளம்: தணியாத பேரன்புடைய உள்ள த்தில் குடி கொண் டிருப்பர் பெருமான். 2. கல்லால மரம்:- o கல்லால் கிழலில் வீற்றிருப்பவர் பெருமான். 3. சுடுகாடு: H H o H பேய்கள் உறையும் கரிகாடு. மயானம் அவர் உறை விடம்.