பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன (17) கடு பணியிலா காந்தபடர் கடை, பின்னு செஞ்சடிை ஒளி அதுளும்பும் அவிர்சடிை, விரிசடை என சடை விளக்கப் பட்டுள்ளது. பிற ஒளிகெறியிற் காணலாம். 16. சிவபிரான் தன்மை முதலியன (17) (1) அண்டம் அணு (17-1) பெருமானுடைய பெருமையை நோக்குங்கால் அண்டம் அணுவாகத் தோன்றும், அவருடைய சிறுமையை கோக்குங்கால் அணுவானது அண்டமாகத் தோன்றும் (2) அமுது (17-2) பெருமான் உயிர்க்கு அமுதாவார் அவருடைய திருவருளே அநுபவித்துப் பருகுங்கால் , அமுதத்துக்கு ஒப்பு ஆவார். அன்பரானவர் பருகுகின்ற ஆரமுஆது அவர். (3) அாசுவேந்தன் (17-3) அம்பலவர் அருந்தவர்க்கு அரசு. இமையவர்க்கும் அரசு. சுந்தரத்து அரசு அவர். தில்லை வேந்தர் நாதாந்தத்து அரசு. (4) அருவும் உருவும் (17-4). அருவுரு என்று அறிதற்கு அரியவர். ஒலிட்டு அழைத் தாலும் தமது உருவைக் காட்டமாட்டார். ' (5) அழகு (17-5) பெருமானுடைய பொட்டிட்ட நெற்றியும், விழியும், வெண்ணிறும் அழகுள்ளது.அழகெலாம் கிறைந்த தீவண்ணர் அவரைக் கண்டவர், அவர் கோலததைக் கண்டு அச்சோ! அழகிதே' என்பர் கங்கை நீர் ஒழுகும் அழகர் அவர். அவருடைய திருவுடம்பு அச்சோ! அழகிதோ! எனத் தக்கது. " . (6) அழிவின்மை (17-6) இறைவன் அழிவில்லாதவர்.