பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன (17) கன (14) இன்பம் (17-14) அஞ்செழுத்தில் தன்னே வைத்து உள்ளத்தில் மகிழ்ச்சி பெருகும் தொண்டருக்கு எட்டுத்திசையிலும் உள்ள பலவித சொல்லாட்சி என்ன? பைம்பொன் மாளிகை என்ன? பவளவா புள்ள மாதர்களின் பருத்த கொங்கை என்ன? கற்பகப் பொழில் என்ன? ஆக எல்லாம் தருவர் கங்கை கொண்ட சோளேச்சரத்தில் விற்றிருக்கும் பெருமான். ஆதலால் அற்புத் தெய்வம் அவான்றி வேறு ஒருவரும் கிடையாது. மோட்ச வீட்டின் இன்பம் அவர். (15) இனிமை (17-15) இனிய கரும்பு அவர். இனிய ஆனந்த வெள்ளம் அவர். இனிய பாலும், அமுதமும் அவர். பாம்பை ஆபரண மாக அணிந்தவர். கரும்பு, பால், தேன், அமுது, கணி இவை போல இனியராகிய பெருமான் நமக்கு உள்ளே ஆனந்தத்தைத் தருவார். பொய்யில்லாத மெய்யர்க்கு கலம் பயின்ற இனியவர் பெருமான். (16) உணர்வு [17-16] பெருமான் உணர்வைக் கடந்த ஒர் உணர்வு ஆவார். (17) உயிர் (17.17) உயிர்களுக்கு அருள் செய்யும் உமாபதி பெருமான், எல்லா உயிர்க்கும் ஈசன் அவர். (18) உலகு ஆவர் (17-18) பெருமான் உலகாவர். (19) எங்கும் நிறைந்தவர் (17-19) உலகெங்கும் கிறைந்தவர் பெருமான். தி. இ. ஒ. க.-3