பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை


    தென்னடுடைய சிவபெருமான்மீது ஆரா அன்பினல் உளங்கனிந்துருகிப் பாடிய பாடல்கள் தேவார முதலிய பன்னிருதிருமுறைகள்ாகும். அவற்றுள் திருமாளிகைத்தேவர், சேந்தனர், கருவூர்த்தேவர் முதலிய ஒன்பதின்மர் அருளிச் செய்த திருவிசைப்பாவும், சேந்தனர் அருளிச் செய்த திருப் பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறையாகும்.
    முதல் எட்டுத் திருமுறைகட்கும் ஒளிநெறி, ஒளிநெறிக் கட்டுரை எழுதிய தணிகைமணி டாக்டர் வ. சு. செங்கல்வராய பிள்ளையவர்கள் ஒன்பதாம் திருமுறைக்கு ஒளிநெறியும் ஒளிநெறிக்கட்டுரையும் எழுதப்புகுங்கால் அவர்கட்கு அகவை 88 ஆகும். கூனிக் குறுகி ஓங்கார வடிவத்தில் இருந்த போதும் மேலே குறிப்பிட்ட இரு நூல்களையும் சொல்லி எழுதச் செய்து கண்பார்வை குறைந்தபோதும் உறுத்து உறுத்து இருமுறை மும்முறை சரிபார்த்துத் திருத்தி 1971 குன் திங்களிலே கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களிடம் அச்சிடுமாறு ஒப்புவித்தனர். திருவாசக ஒளிநெறியைத் தணிகைமணியவர்கள் தமது கைப்படவே எழுதினர் என்பதும், திருக்கோவையார் ஒளிநெறியும், திருவிசைப்பா ஒளிநெறியும் சொல்லி எழுதப்பெற்றவை என்பதும் அறிதற்பாலன. '
    'எனக்கு 86க்கு மேல் வயதாகி கோய்வாய்ப்பட்ட கிலேக் கிடையில் திருக்கோவையார் ஒளிநெறியும் கட்டுரையும் எழுதப்பட்டன. எனயாளும் தணிகைப்பெருமான் திருவருள் இப்போது திருவிசைப்பா ஒளிநெறியும் கட்டுரையும் எழுதும் படி வைத்துள்ளது. அவர் திருவருளால் முடிவுபெற வேண்டும்'