பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அFC) திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை சித்தர், தேவர், இயக்கர், முனிவர் இவர்களெல்லாம் தில்லே அந்தாதி அருளாய்! என்று ஏத்துக் கலத்து முடிசூடி கொத்தார் சடைதாழ ஆடுவர் பெருமான். தேவலோகம் (உ.ம்பர் காடு) பூலோகத்தில் (இம்பர்) வந்து விளங்குவதுபோல ஒளிவீசும் கோயிலும், கோபுரமும், மண்டபமும், உள்ள தில்லேப் பதியை இடமாகக் கொண்டுள்ளார் பெருமான். ஆடும்போது மணி ர்ேத்திவலை முத்து அரும்பித் திருமுகம் மலர்ந்து சொட்டக் ழ்ேக்கோட்டுர் மணியம் பலத்தில் ஆடுவர் பெருமான். கந்தி முழவங்கொட்டச் சிற்றம்பலத்தில் நாகர் ஆடுவார். புலித்தோலைத் தோளில் இட்டு உமையாள் காண ஆடுவர்பெருமான். பொன்மலேயுள் வைரமலைபோல் வலக்கை கவிழ்த்து கின்று அமரர் போற்றச் சிற்றம்பலத்தில் அழகர் ஆடுவர். திருவயிற்றின்மீது உள்ள மாலே நான்கு திசைகளிலும் அலேயும்படி கடம்புரிவர் பெருமான். தேவர்களும், வித்தியாதரர்களும், ஆனந்தக் கண்ணிர் விட்டுப் புகழ்ந்து அதுதிக்க ஆடுவர் கூத்தனர். சிந்திப்பரிய தெய்வப் பதியாகிய சிற்றம்பலத்தில் ஆரூர் கம்பி (சுந்தரமூர்த்தி) அவர்கள் இசைபாடப் பெருமான் ஆடுவர். தில்லை மறையோர்கள் தொழ வையம் உய்ய மகிழ்ந்து ஆடுவர் சிற்றம்பலவர். அந்துபி, குழல், யாழ், மொங்தை இவை ஒலிக்க, இருடியர் கணம் துதிக்க, நந்தி கை கொண்டு முழவம் வாசிக்க நடஞ்செய்யும் பரமருடைய கோயில் சிற்றம்பலமாம்.