பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88, சிவனும் தில்லைவாழ் அந்தணரும் (57) கெட 88. சிவனும் தில்லைவாழ் அந்தணரும் (57) உன் அடியார் தேவலோகத்தை ஆள, நீ அங்கனம் ஆளாதே, மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டும், குலாவியும் கூத்தாடுகின்ருய். அருமறையை அறிந்து எப்போதும் வேள்வி இயற்றும் பெரியோர் தில்லைவாழ் அந்தணர். பூமியில் சிவலோக வேத கிலேமாருத மூவாயிரவரையும், மகிழ்ந்து ஆளவல்லவர் மெருமான். பசுவை வேள்விக்கு உபயோகப்படுத்தும் அந்தணர் தில்லை அம்பலத்துள் உள்ள மூவாயிரவர். ஆ றங்க நான்மறையோர் மூவாயிரவர். --- கற்பக விருட்சம் போன்று சிவபிரானுடைய திருப் பெயர்கள் ஆயிரம் நூருயிரக் கணக்கில் பிதற்றும் (சபம் செய்யும்) தன்மை உடையவர்கள் வாழும் தில்லைநகர். மூவாயிரம் செழுஞ்சோதி அந்தணர் செங்கை கூப்பித் கொழுகின்ற பெருமான் கூத்தப் பிரான். தெய்வ வாய்மொழியார் திருவளர் மூவாயிரவர் வணங்கு கின்ற தெய்வம் கூத்தப்பிரான். தேசமிகு புகழோர் தில்லே மூவாயிரவர். மூவாயிரவர் 'பூ' ஏந்தித்தொழ, புகழேந்தும் மன்றினுள் பொலிகின்ற தலைவர் கூத்தப்பிரான். மறைகள் கான்கையும் கொண்டு அந்தணர் ஏத்த மகிழ்ந்து கடம் புரிவார் பெருமான். பெருமான் புயத்தின்மீது புலித்தோலும் திருஅேறும் பூநூலும் விளங்கக் காணப் பெற்றவர் தில்லைவாழ் அந்தணர். இல்லவாழ் அந்தணர் ஏத்த அனலைக் கையிலேந்தி அரவமாட அழகர் ஆடுவார்.