பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை மறைவல காவலர்க்ள் தில்லைவாழ் அந்தணர் வணங்க அம்பலத்தில் ஆடுகின்ருர் பெருமான். - முத்தியாளர், நான்மறையோர் ஆகிய மூவாயிரவர் பெருமானுடன் ஒத்து வாழும் தன்மை உடையவர்; இவர்கள் ஒதிய நான்மறையைத் தெத்தே" என்று வண்டுகள் பாடும். மூவாயிரவருடன் கலந்து விளையாடும் அம்பலம்தான் பெருமானுடைய நடன சபை. மூவாயிரவர்களோடு குடிவாழ்க்கை கொண்டு அவர் களோடு குலாவிக் கூத்தாடுவர் பெருமான். வேதம் ஒதும் தன்மை மாறுபடாத மூவாயிரம் அந்தணர்களே மகிழ்ந்து ஆளுகின்ற பெருமான். 57. சிவனும் தேவர்களும் (58) தேவர் கணம் தொழுதேத்தும் தேவன்; அவர்கள் முறையிட்டும் அவர்களால் அறிய முடியாதவர் பெருமான்; எல்லாத் திசைகளினின்றும் தேவர்கள் ஏத்தும் அழகிய தில்லே அத்தர் பெருமான். தேவர்கள் பாவிக்கும் பாவகத்துக்கு அப்பாற் பட்டவர் பெருமான். தேவர்களும், சித்தர்களும், இயக்கரும், முனிவரும் தில்லை. அத்தா! அருள் புரிக அம்பலவா என்றென்று ஏத்தப் பெருமான் கடம் புரிவர். பிரமன், திருமால், இந்திரன், சூரியன், ருத்திரன் எல்லாம் ஆவர் கங்கைகொண்ட சோளேச்சரத்துப்பெருமான். பிரமன், திருமால், முதலாகக் கூட்டத்து அன்பர்கள் பருகுகின்ற அமுதம் ஆவார் பெருமான். * ெேராடு பூவைத் துாவித் தொழுதேத்து கையினராய் சுவாசத்தை உள்ளடக்கி உருகிய அன்புள்ளவராய்த்