பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெஅ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை ஊணை உண்பர். அவர் உண்ணும் பர்த்திரம் கபாலம் (ஒடு). பெருமான் பகற் பொழுதிலிருந்து "பக்தா பலியிடுக” என்.அறு கூறி எங்கும் பார்க்கின்ருர். 62. சிவனும் பார்வதியும் (63) அன்ன நடையுடைய உமா தேவியின் கணவர் சிவபெருமான். தேவி பார்க்க வேட ரூபம் கொண்டு நாயுடனும், கையில் வில்லுடனும், சென்றனர். பெருமான் உமை அஞ்ச யானையின் தோலே உரித்தார். மலைமகள் தொழ ஆடுவர் கூத்தப்பிரான். அவள் பெருமான் மகிழும் பெருந்தேவி. அவளுக்கு அருளும் குரு. அவர். அவளுடன் ஆன் ஐந்தாடுவர். அவள் பெருமானது தொடையை வருடுவள். * 63. சிவனும் பார்வதியும் கங்கையும் (64) கொடி போன்ற இடையை உடைய பார்வதி பார்த்தால், கொடியளாகிய அவள் கோபிப்பாள் என்று சடைமுடிமேல் கங்கையை ஒளித்து வைத்திருக்கின்ருர் பெருமான். பெருமான் உலாப் போந்து ஆடும் அழகிய தோற்றம், உமாதேவியிடத்திலேனும், கங்கையிடத்திலேனும் கிடை யாது. அப்படி அவர் ஆடும் கோலம் கொள்வதற்கு அவரது மனக்கருத்துத் தான் யாதோ ? 64. சிவனும் பிரமனும் (65) பிரமனும் இந்திரனும் பெருமானே வணங்கி "ஆல. கண்டா அரனே! அருளாய், என்று அதிக்கப் பரமன் ஆடுவர். அவர் ஆடும் அரங்கம் அம்பலம். பிரமனும்: திருமாலும் எம் கூத்தப்பெருமானுடைய திருவருளேப் பெற்ருர். பேரின்ப விட்டில் இருக்கலாம் என்று இன்னமும் போற்றி கிற்கின்ருர்கள். அன்னப்பறவையின் உருவத்துடன்