பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ER O திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 68. சிவனும் மறையும் (வேதமும்) [69] மறைதான் கீதம் பெருமானுக்கு நான்கு மறைகளும் ஒலமிட்டு அரற்றும் அப்பன் பெருமான். அந்த நான்கு மறைகளும் உணர்வதற்கு அரிதான சூழலில் ஒளித்திருப்பார் பெருமான். நான்கு மறைகளும் பெருமானத் தொடர்ந்து செல்லும். மறைகள் எவையும் அறிதற்கு அரிய பெருமையை .யுடையவர் பெருமான். மறைகள் தேட அரியராய் அவை முறைமுறை முறையிட்டும் உணர்வதற்கரியவர் பெருமான். வேதத்தைப் பொழியும் பவளவாய் உடிையவர் பெருமான். 69. சிவனும் மறையோரும் (அந்தணரும்) (70) இராவணனே விரலால் அடர்த் த பெருமானே! அருள் புரிவாயாக ! என்று துதித்து மறையோர் வணங்கத் தில்லேசி சிற்றம்பலத்தில் பரமன் ஆடுவர். பொய் சொல்லாத வேதியர் சாங்தை ஊர் ஆயிரம் மறையோர் உண்மையுடன் திருப்பணி செய்யக் காவிரிக் கரையில் திரு ஆவடுதுறையில் விற்றிருக்கும் அமுது பெருமான். வேத வழியில் கிற்கும் மெய்யர். தொழுகின்ற ஆதி பெருமான். I 70. சிவனும் மாதரும் (71) அம்பலத்தில் தாண்டவம் புரியும் பெருமானப் பெண்கள் நாள்தோறும் கூடி கின்று ஆரவாரம் செய்து பாடி எழும் மாலேக் காலத்துப் பேரொலியை ஆசிரியர் "புருடோத்தம நம்பி" கண்டு கூறின பாடலே "ஒதுகின்ற அடியார்கள் மலைமகளாகிய பார்வதியின் கணவகிைய சிவபெருமானே அடைந்து இன்புறுவர்.