பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கில்லே முதலாம் தலப்பகுதி ബ5 (8) திருமால், இந்திரன் பிரமன், தேவர்கள் இவர்கள் அடைக்காவலில் நெருங்கி முடி மோதுவதால் கீழ் விழுந்த மணிகள் முன்றிலில் விளங்கும் பெரும்பற்றப்புலியூர். (9) அந்துபி, குழல், யாழ், மொங்தை இவை ஒலிக்க இருடியர் கணம் அதிப்ப நந்தி முழவம் வாசிக்க கடம் புரிகின்ற பரமர் கோயில் பெரும்பற்றப்புலியூர். (10) தேர் விழாவில் குழலொலியும் தெருவில் கூத் தொலி, ஏத்தொலி, வேதம் ஒதும்ஒலி இவை எல்லாம் கடலொலிபோல விளங்கும் பெரும்பற்றப்புலியூர். (11) மறையோர் ஒம குண்டத்தில் வளர்த்த இத்திரள் அரும்பும் பெரும்பற்றப்புலியூர். (12) மறைத் தொழில் மிகுந்த அழகுமிக்க பெரும்பற்றப் புலியூர். (13) நீலோற்பலமும், செருந்தியும் செண்பகமும் அரும்பும் பெரும்பற்றப்புலியூர். (14) மாம்பொழிலும் கமுகுமரங்களும் சூழும் பெரும் பற்றப்புலியூர். (15) தேன் சொரியும் பொழிலில் வண்டுகள் தென்ன எனப் பாடுகின்ற பெரும்பற்றப்புலியூர். (16) கடன இலக்கணங்கள் பொலிகின்ற பெரும்பற்றப் புலியூர். (17) நான்கு மறைகளைக் கொண்டு அந்தணர்கள் ஏத்தப் பெருமான் நடம் செய்கின்ற பெரும்பற்றப்புலியூர். (18) புலித் தோலையும், திருநீற்றையும், பூணுாலேயும், கொண்ட மார்பைத் தரிசிக்கும் பேறுபெற்ற அந்தணர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூர். 10. பொன்னம்பலம் (1) சோழன் பொன் அணிந்த தில்லை அம்பலம். (2) உலகத்தினர் இறைஞ்சப் பதஞ்சலி முனிவர்க்கு ஆடலைக் காட்டிப் பெருமான் அமர்ந்துள்ள செம்பொன் அம்பலம்.