பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ"2. திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 11. தில்லை மூவாயிரவர் (1) மூவாயிரவரும் குடிவாழ்க்கை கொண்டு அவர்க ளோடு குலாவிக் கூத்தாடுகின்ருர் பெருமான். 12. தில்லையும் திருமாலும் தில்லைச் சிற்றம்பலத்துத் திருவாயில் முன்றிலில் திருமால் (கோவிந்தராசப் பெருமாள்) வரம் கிடக்கின்ருர், 2. ஆமூர்-திருஆமூர் வைப்புத்தலம் இவ்வூர் தென்னுர்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு மேற்கே 5 மைல் துாரத்தில் உள்ளது. அல்லிப்பூ மலர்கின்ற வயல்களே உடைய திருவாமூர் திருகாவுக்கரசரின் ஊர். 3. திரு ஆரூர் இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மூவர் தேவாரம் பெற்றது. பஞ்ச பூதத்தலங்களில் இது பிருதி வித்தலம். மூலவர் புற்றிடங் கொண்டவர்; சபதவிடங்கத் தலங்களுள் முதன்மையானது. இத்தலத்துத் தியாகேசர் முசுகுந்த சக்கரவர்த்தியால் தாபிக்கப்பட்டவர். விதி விடங்கன் எனப் பெயர் பெற்றவர். பிறக்க முத்தி அளிக்கும் பெரும் பதி. கோயில், குளம், செங்கழுேேராடை இவை ஒவ்வொன்றும் ஐந்து வேலிகளென்பர். 'அஞ்சணை வேலியாரூர்' 'ஆதரித்திடங்கொண்டாரே' என்பது அப்பர் தேவாரம். (4-53-7) பின்னும் பல விசேடங் களேக் கொண்டதலம். அவை ஒளி நெறியிற் காண்க. (1) உலகில் ஆதியாய் மிக்கசிர் பெற்ற ஊர் திருஆரூர். இவ்வூரில் தியாகேசர் விதிவிடங்க னென்னும் பெயருடன் கடனஞ் செய்கின் ருர், (2) குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி இவை திருவிழாவின் ஒலியுடன் கலந்து விண் அளாவும் திருஆரூர். (3) சத்தியாய்ச், சிவமாய், முழுமுதலாய், வித்துமாய் ஆரூர் ஆதியாய், விதிவிடங்கராய், கடம்புரிகின்ருர் பெருமான்.