பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லே முதலாம் தலப்பகுதி б7/H_ 4. திரு ஆவடுதுறை இத்தலம் மாயூரத்திற்கு அடுத்த நாரசிங்கன் பேட்டை புகைவண்டி கிலேயத்திற்குக் கிழக்கில் 1; மைலில் உள்ளது. ஊரின் பெயர் சாந்தை, சாத்தனுார். கோயிலின் பெயர் ஆவடு துறை. பசுவடிவுடன் உமாதேவியார் பூசித்த காரணததால் 'ஆவடுதுறை' என்ற பெயர் வந்தது. (1) ஆவடுதுறை காவிரிக்கு அருகில் உள்ளது. (2) மெய்யடியார்கள் ஆயிரம் அந்தணர் பணிசெய்கின்ற கோயில் திரு ஆவடுதுறை. (3) மதில் அணிந்த ஊர் சாந்தை. (4) காவிரியின் தென்கரையில் சாந்தையூர் உளஅ. (5) பொய்யிலாத வேதியர் வாழ்கின்ற ஊர் சாங்தை. (6) பொற்கோயிலுள் அருள் கிறைந்து அமர்கின்ருர் திரு ஆவடுதுறை ஆண்டவர். (7) மாமரங்களின் மணம் கமழும் பொழில் வாய்ந்தது சாந்தையூர். (8) மணி மாடமாளிகை விதி சூழ்ந்த ஊர் சாங்தை. (9) சாந்தையூருக்கு இன்பன் பெருமான். 5. திரு இடைக் கழி இத்தலம் அட்டவீரத்தலங்களுள் ஒன்ருகிய திருக்கட ஆருக்கு 4 மைல் துாரத்தில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடப் பெற்ற பிரபலமான சுப்பிரமணிய தலம். இத்தலத்தில் முருக வேளின் திரு உருவம் திருத்தணிகையில் இருப்பது போல இருப்பதால் அருணகிரியார் திருஇடைக் கழியைப் பாடும்போதெல்லாம் திருத்தணிகையை உடன் சேர்த்துப் பாடுவர். (1) எவர்க்கும் மெய்யன் பராம், தெளிவும் திடமும் கொண்ட வைதிகர் வாழ்கின்ற ஊர் திரு இடைக்கழி. (3) கலம் பொழில் விளங்கும் தலம் திருஇடைக்கழி. (3) திசை எங்கும் கீர்த்தி பெற்ற தலம் திருஇடைக்கழி.