பக்கம்:திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவமயம்
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

-

கணபதி துதி.

சுந்தரனாம் தென்விரிஞ்சைத் தோகைமயில் வாகனன்மேற்
சந்தமுறும் பிள்ளைத் தமிழ்பாடச் செந்மிதழ்சேர்
வாக்கெனக்கு நல்கி மதமா முகக்கடவுள்
ஊக்கமுடன் காப்பான் உவந்து

பருவத்தொகை.

திருவருள்

சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
வம்புலியே சிற்றிலே யாய்ந்த சிறுபறையே
பம்புசிறு தேரோடும் பத்து.

காப்புப் பருவம்

திருக்கஞ்ச விருகரத்தி னபயவர தமுஞ்சேர்

திகழுமர கதமளித்த தெய்வசிகா மணியை

யருக்கன்சந் திரன்றவழும் புரிசைவிரிஞ் சையில்வா

ழாறுமுகத் தரசையெமை யாண்டவனப் புரக்கப்

பெருக்கஞ்சந் தததும்மேவுஞ் சிவநாத னிடத்திற்

பிறந்தவொரு சிறுபாலன் பெருங்கானி பெறவே

யிருக்கஞ்சன் முதலமரர் அரகரவென் றேத்த

விளைத்தபிறை குடுமுடி வளைத்ததிரு வருளே. ()