பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116女 ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

திருவேங்கடம் என்று கூறும்படி வாழ்கின்ற நீல மணி போன்ற திருமாலின் அருள் சேர்ந்த வழுவழுப்பான கோழரை அடிமரத்தை யுடைய சண்பகச் சோலை சூழ்ந்த புதுவையாய்! கோவைவாய் முத்தம் அருள் கோதையே! மெய்த்திருப் பாவை பாடித்தரும் கோவைவாய் முத் தம் அருள்!

ஊடுவார் ஊடலை உணர்த்துவா ரைக்குறித்து

உள்ளியது உணர்த்துமுதல் வர்க்கு

உறையுளாய் நித்திலத் தைப்பரப் பிச்சுழித்துயே

ஒன்றுதொட்டு ஐந்துஎண்ணி

நாடுகா வற்குஎனச் சோதிஅம் தாமநல் நகர் நின்று பாலாழி வாய்

நண்ணியே நாகபோ கத்துயில் நயந்தவன்

நடித்தவெகு ரூபத்துள் ஆம்

வீடுகா மித்துளர் காமிக்கும் வடமலையுள்

விமலனும் பொன்னிநடு வே

விழிதுயிலும் அமலனும் சோலைமலை நிமலனும்

விரைந்து எனது புளகமுலை மேல்

கூடுவார் ஆம்எனில் கூடலே கூடு எனும் கோவைவாய் முத்தம் அரு ளே! கோதையே! மெய்த்திருப் பாவைபா டித்தரும்

கோவைவாய் முத்தம் அரு ளே! (82}

ஊடுகின்ற காதலியரின் ஊடலை உணர்த்தி நீக்கும் திருமாவை நினைத்துக் காதலியர் நினைத்ததை முத்துக்களைப் பரப்பினாள் கோதை,

அம் முத்துக்களைத் தன் மெல்விரல்களால் அழித்து ஒன்று முதல் ஐந்து எண்ணும் வரை கூடல் இழைக்கத் தொடங்கினாள்.

நாடு காப்பதற்காகச் ஒளி மயமான பொன்னுலக நல்லகர் நின்று புறப்பட்டுப் பாற்கடலிடத்து அடைந்து, பாம்பணையில் இன்பமாகிய அரிதுயில் விரும்பியவன். பற்பல திருமேனி வடிவம் எடுத்து நடித்தான்் அவன் கொண்ட பல வடிவங்களில் விடுதலை முத்திரையை விரும்பியவர் விரும்பும் வடமலையுள் விமலன் வடிவம் ஒன்று.