பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாரானைப் பருவம்

புழைபடு சுவட்டுக் கவுள்கள்வழி பொழிபுற் புதக்கடாக் கலுழி நால் வாய்ப் புயல் கிழித்து எழுபிறைக் கிம்புரிக் கோட்டுவன்

புகர்முகம் அழைப்ப உரு கிக்

குழைமுகத் திருமகள் அனைத்து அழுத் தியமென்

கொடுங்கையை நெகிழ்த்தது.அல் லால்

குங்கும படீரத்தின் முழுகும் இள முலையுடன் குழையுமார் பையும் நெகிழ்த் தே

தழைதரு திருக்குழற் கற்றைகற் பகநறுந்

தாமமொடு பிடர்முயங் கத் தமனியத் துகில் அவிழ்ந் திடவிரைந்து உதவிய

தயாபரன் தொண்டர்மகிழ் வான்

மழைபடிந் திடுசண் பகச்சோலை வளமல்கு மல்லிநாட் டவள் வருக வே! வடபெருங் கோயிலுள் கடவுள்மழ களிறு அனைய

வளர் இளம் பிடி! வருகவே! (58)

துளைபட்ட அடையாளமுள்ள கன்னங்களில் ஒழு கிக் குமிழியிடுகின்ற மதப்பெருக்கையுடைய தொங்கும் வாயையுடையது

なA/fg?@ア

அதன் பூண் கட்டிய கொம்புகள் வானத்துப் பிறையைப் போன்றவை. யானை, மேல் நிமிர்ந்தால், வான் முகிலையே அதன் கொம் புகள் கிழித்துவிடும். அவ்வளவு உயரம். வலிய யானையின் முகம் பற்பல புள்ளிகளைக் கொண்டது. -

அ.வி யானை திருமாலை வழிபட ஒரு பொய்கையில் இறங்கித் தாமரை மலரைப் பறித்தது. அப்போது ஒரு முதலை அதன் காலைக் கவி விக் கொண்டது. முதலை யிடமிருந்து மீள்வதற்காக யானை

போராடியது. இறுதியில் ஆதிமூலமே என்று கூறியது. அதன் குரலைக் கேட்டதும் திருமாலின் மனத்தில் கருணை சுரந்தது.