பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 156

தேவர்கள் பாதுகாவலாக நின்று வணங்குகின்றனர். மலர்மகள், நிலமகள் என்ன வாழ்வு பெற்ற நங்கையே! ஆண்டாளே! பொன்னுரசல் ஆடியருள் வாய் புதுவைமாநகர்மன்னன் வதுவைக்கு அமைந்துள்ளாய் கோதையே! பொன்னுரசல் ஆடி அருளாய்!

எத்தேவ ரும்பரவும் அரவிந்த லோசனத்து

எம்பிரான் உந்திஅந் தண்

இண்டையா சனமீது உதித்தஒரு நான்முக

னிடத்தினி லுதித்தகு லக்

கைத்தேவன் நிலைபெற்ற பத்தின்மேல் ஒருகோடி

கடவுளர்கள் ஓராயி ரக்

கதிர்விரித் தவர்கள்பன் னிருகோடி இருகோடி

கடிமருத் துவர்வசுக் கள்

மொய்த்தே வழுந்துநால் இருகோடி எனநின்று

முப்பத்து. முக்கோடி யோர்

முறைமுறை வணங்கும்.அயி ராவதக் கடவுள்பொன்

முடிமீது வைத்தபடி யே

புத்தேளிர் பொன்முடியில் வைத்தபொன் முடிமுதல்வி

பொன்ஊசல் ஆடியரு ளே!

புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!

பொன்ஊசல் ஆடியரு ளே! [99]

தேவர் அனைவரும் வணங்கும் தாமரைக் கண்ணன் எம் பெருமான். அவன் உந்தியில் அழகிய குளிர்ந்த தாமரையில் உதித்தவன் நான்முகன். அவனிடத்து உதித்தவன் குலத்தை ஏந்திய கையையுடைய சிவன். பத்தின்மேல் ஒரு கோடி அதாவது பதினொரு கோடி தேவர்கள். ஒராயிரக் கதிர்விரித்த வானவ(சூரியர்கள் பன்னிரு கோடியர்

சிறப்புற்ற மருத்துவர்கள் இருகோடியர் என நிலைபெற்ற முப்பத்து முக்கோடியர் முறைப்படி வணங்கும் அயிராவதக் கடவுளாகிய இந்திரன் தன் பொன் முடி மீது உன் அடியை வைத்தது போலவே, மேலே கண்ட தேவர் அனைவரும் தங்கள் பொன்முடியில் வைத்த பொன்முடி களையுடைய முதல்வியே! ஆண்டாளே! பொன்னுரசல் ஆடி அருள்வாய்! புதுவைமா நகர் மன்னர் வதுவைக்கு அமைந்துள்ளாப் பொன்னுரசல் ஆடி அருளாய்!