பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

தவளவெண் பட்டினைச் சுற்றிவெண் பிறைஎனத்

தழைதிருமண் நுதல்எழுதி யே தந்திரத் தொடுமந் திரம்பராய் நறுமலர் தனைச்சொரிந்து உருவிலா தான்்

உவளகப் பித்தித் தலத்துஉரு உளனாக

உபசரித்து ஒருபோது நீ

உண்பதேன்? மெய்த்திரு அரங்கேசன் இன்றுவந்து

உன்னை இங்கு எய்திநா ளைக்

கவளமால் யானைமேல் திருஉலா வந்திடக் கண்டநின் கனவுஉண்மை யாம்!

காரிதரு மாறர்திரு மகளாய கோதையே!

காமநோன் பதுதவிர்க வே! (1161;

குவளை மலர்போல் ஒளிகொண்ட கண்களைக் கழுவி, பவளநிற வாயில் அமைந்த முத்துக் கோவை ஒத்த பற்களை விளக்கி, மூன்று பெயர் கொண்ட (கங்கை, யமுனை, சரசுவதி) ஆறுகள் ஒன்றுபட்டுக் கூடும் திரு முக்குளத்திலே, தை ஒரு திங்கள் என்று பாடி நீ பாராட்டிய தைத் திங்களில் நீராடிக் கூத்தலை உலர்த்துகின்றாய் மிக்க வெண்பட்டினை உடுத்தினாய் இளம்பிறை போலத் தழைக்கின்ற திருமண்ணை நெற்றியில் தரிக்கின்றாய்!

தந்திரமும் மந்திரமும் ஒதி, நறியமலர்களைச் சொரிந்து மன் மதனை அகமனை (அந்தப் புரத்துச் சுவரிலே உருவுள்ளவனாகக் கற்பனை செய்து எழுதி, ஒரு நாளைக்கு ஒருபோது மட்டும் உணவு உட் கொண்டு நோற்பது ஏன்?

உண்மையான திரு வினனான, ஒப்பில்லா அரங்கேசன் இன்றைக்கே வந்து உன்னை இங்கே மணந்து கொள்வான். நாளைக்குக் கவளம் உண்கின்ற பெரிய யானையின்மேல் திருவுலா வருவதாகக் கண்ட ஆண்டாளே! நின் கனவு உண்மையாகும். காரிதரு மாறர்திரு மகளாய கோதையே காமனை நோக்கி நோற்கும் நோன்பினை நிறுத்திவிடு!

தண்அளிக் கடவுளாய் நீகுறித் தவன்.இனித்

தனியிருப் பவனும்அல் லன்

தாமதித் திலமணிப் பந்தர்இந் திரன்அயன்

தமரொடு மகள்பேச வே