பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

சிறுதேர் முறையே 7,8 பாடல்களே உள்ளன. அப் பருவங்களிலும் சில பாடல்கள் அழிந்திருக்க வாய்ப்புண்டு.

கழிநெடிலடி (நீண்ட) ஆசிரிய மண்டலங்களும், பலவகைச் சந்தக் கவிகளும் அந் நூலில் இடம் பெற்றுள்ளன.

குலோத்துங்கன் பிள்ளைத் தமிழுக்குப் பின் தோன்றிய அனைத்து நூல்களுக்கும் இதுவே படிச்சந்தமாக அமைந்தது. பத்துப் பருவமும் சற்றொப்ப நூறு பாடல்களும் ஆசிரிய மண்டலம் (விருத்தம்) வண்ண மண்டல(சந்த விருத்தங்களால் ஆயினவாகவே அமைந்துள்ளன.

10.30.50 பாடல்களில் அமைந்த பள்ளைத் தமிழ் நூல்களும் சில

பெண்பாற் பிள்ளைத் தமிழில் மட்டும் இறுதிப் பகுதி சில நூல்களில் மாறுபடுவதைக் கவனிக்கின்றோம். சிற்றில், சிறுசோறு, பொன்னுரசல் என்ற மூன்று பருவங்கள் மட்டுமே இறுதிப் பருவங்களாகப் பெரும்பாலானவற்றில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இந்த ஆண்டாள் பிள்ளைத்தமிழ் இறுதியில் பிங்கலந்தையும் பன்னிரு பாட்டியலும் மட்டும் குறிப்பிடுகின்ற காமன் நோன்புப் பருவத்தை இணைத்துக் கொண்டுள்ளது.

பெரும்பாலான பிள்ளைத் தமிழ் நூல்கள் காப்புப் பருவத்தையே முதலில் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டும் பழிச்சுநர்ப் பரவல் என்ற பகுதியை முதலில் கொண்டுள்ளது. இது அழகர் பிள்ளைத் தமிழை ஒட்டி எழுந்த வழக்காகும்.

ஆண்டாள் பிள்ளைத்தமிழில்,

1. காப்பு 1; 2 அவையடக்கம் 2. 3. பழிச்சுநர்ப் பரவல் 11, 4 காப்பு HA; 5. செங்கீரை 11 ல் தால் AI; 7. சப்பானி 10, 8 முத்தம் 10: 9. வாரானை 10; 10. அம்புலி 7. 11. சிற்றில் 5; 12. சிறுசோறு 6. 13. பொன்னுரசல் 11. 4. காம நோன்பு II; 15. நூற்பயன் Z

f இவற்றுள் அம்புலி, சிற்றில், சிறுசோறு ஆகிய மூன்று பருவப்பாடல்கள் முறையே 7,5,6 என மட்டுமே உள்ளன. அனைத்துப்