பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் 18

பருவங்களுக்கும் 1 பாடல்கள் அமைக்க வேண்டும் என்றே கவிஞர் கருதியிருக்கலாம். அவ்வாறே பாடியும் இருக்கலாம். ஆனால், எதோ காரணத்தால் ஏடுகள் சிதைந்தோ மறைந்தோ போயிருக்கலாம்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் முழுமையாகக் கிடைத்தன. பிள்ளைத்தமிழ் நூல் இதுமட்டுமாவது கிடைத்ததே என்று அமைதியுறுவதைத் தவிர வேறு வழியில்லை.

பிள்ளைத் தமிழ் நூல்களில் காப்புப் பாடுகையில், முதலில் காப்புக் கடவுளாகிய திருமாலையே பாடவேண்டும் என்று பாட்டியல் இலக்கணங்கள் அனைத்தும் ஒருபடித்தாகக் கூறுகின்றன.

ஆனால் சில சமயத்தார்தாங்கள் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்களில் திருமாலைப் பாடாமல் வேறு சில தெய்வங்களைக் காப்பாகப்

முதல் பிள்ளைத்தமிழ் என்று கருதப்படும் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழிலேயே ஒட்டக்கூத்தர் திருமாலைப் புறக்கணித்துள்ளார். பின்னர் வந்த பெரும் புலவர் பலரும் ஒட்டக்கூத்தரைப் பின்பற்றி இலக்கண நூல்களைப் புறக்கணித்துள்ளனர். இதற்குக் கார ';)'பத் காழ்ப்பைத் தவிர வேறு இருத்தல் இயலாது.

}jy β

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் வைணவ நூல் ஆகையால் திருமாலே

காப்பில் இடம் பெற்றுள்ளார்.

நூலினுள் சில இடங்களில் வைணவத்தை ஏற்றிப் போற்ற வேண்டும் என்ற நினைவால் பிற தெய்வங்கள் ஒரளவு குறைவாகப் பேசப்பட்டுள்ளன. (பாடல் 41) இது இக் காலத்துக்கு ஒவ்வாததுதான்். ஆனாலும் இவ்வாறு பிற தெய்வங்களைப் போற்றாமல் புறக்கணித்துத்தம் இட்ட தெய்வத்தை மட்டும் போற்றுவது உலகுக்கும், ஆன்மீக இயலுக்கும் பொருத்தமானதே என்று "மோட்ச சாதன விளக்கம்" என்ற ஒரு பழைய நூல் விரிவாக விளக்குகின்றது. அந்நூலை யாத்தவர் சைவரும் அல்லர்; வைணவரும் அல்லர் வேதாந்தி.அதாவது ஏகான்மவாதி என்னும் அத்வைதி அவர் சைவம் வைணவ பேதம் பாராட்டத் தேவையில்லாத தனிச் சமயத்தார். அவர் வாக்கும் நோக்கும் இங்கே காண்போம் :

மகான் சாது நிச்சலதாசர் என்னும் புண்ணியர், விசாக சர்கரம்

ஏழாம் தரங்கத்தில் விரிவாய் எழுதியிருக்கின்றார்.

"மக்களால் வணங்கப்படும் அனைவரும் ஈசுவரர்கள் தாம். எந்த இடத்தில் பிற தெய்வம் நிந்திக்கப்படுகின்றதோ அதன் நிந்தையால், அந்தத் தெய்வத்தின் உபாசனையை விடுவது கூடாது.