பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் * 22

என்றும் பல இடங்களில் விடாமல் தொடர்ந்து கூறுவதில் பேருவகை கொள்கின்றார் துடைய பாவலர்.

ஆண்டாள் ஐவரை மணந்து கொண்டதாகக் குருபரம்பரையில் வரலாறு இல்லை.

அப்படியாயின் இச் செய்தி இப் புலவருக்கு மட்டும் எப்படிக்

சீவல மாறன் கதை

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏடு தேடித் திரட்டிய செய்தி அறிவோம். அவர் திரட்டிய ஏடுகள் இன்றும் பல அச்சாகாமல் உள்ளன. உவே.சா. நூலகத்தார் ஒன்றிரண்டு மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அவற்றுள் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. தாவின் பெயர் "சீவல மாறன் கதை. அது ஒர் இனிய காவியம். சிதம்பரநாத கவி என்பவர் அதனைப் பாடியுள்ளார். அவர் சைவப் பற்றாளராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆயினும் அவர் வைணவ வெறுப்பாளராக இருக்கவில்லை. இரு சமயத்தையும் இரு கண்களாகக் கருதியுள்ளார்.சீவலமாறன் தெல்லையில் பிறந்தவன். திருத்தல யாத்திரை புறப்படுகின்றான். பல ஊர்த் தெய்வங்களைச் சைவ, வைணவ வேறுபாடின்றிக் கண்டு வருகையில், ஆண்டான் பிறந்த திருவில்லிபுத்துரை அடைகின்றான். இவ் இடத்தில் ஆண்டாள் வரலாற்றில் ஒரு புதுச் செய்தியை இணைக்கின்றார் சிதம்பரதாத கவிஞர். -

திருமால் கண்ணாகத் தோற்றம் செய்தபோது திருமாவின் முத் தேவியருள் ஒரு தேவியாகிய நில மகள், சத்தியபாமையாகப் பிறந்துள்ளாள். ஒருநாள்,

பஞ்சவரும் இன்பமுறும் பாஞ்சாலி எனும் திருவை அஞ்சொல்இளம் புவிமடந்தை அவமதித்து, நினைய, அவள் இன்சொல் இளங் குயில் அனையாய் என்போல ஐவருக்கும் தஞ்சமுறும் ஒருமனைவியாய் வருதி எனச் சாபமிட்டாள்.

தையலாள் உடுசாபம் தப்பாமல் தரணிமான் தூய்யமால் ஐந்துஉருவாய்த் தோன்றியே தோய்ந்தருள வையtதில்துளய மலர்க்காவில் அவதரித்துப் பையரா அணிஅல்குல் பட்டர்பிரான் இடத்திருந்தாள்.