பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இரவி மதி

முழுமதி அதனுள் நிலவுடன் அமுதும்

முதிர்சிறு பிணையும் போற்பொலி முகமஎனும மலருள முறுவலும மழலை

மொழியுடன் விழியும் கோட்டிய வழுவுறுவடுவின் மிசைஇரு தனுவும்

வளமிகு பிறையும் கூட்டிய மழையென இலகு புருவமும் நுதலும்

மலர்மலி குழலும் தீட்டிய

பழுதறு படிவ முடன்இமையவர்கள்

பணிதிரு வுருவம் காட்டிய பழமறை பரவும் புதுவையில் எமது

பழவினை ஒழிநண் பாட்டியை

எழுதிரை மறுகி அமுதெழு பரவை யினுள்வரை அழுவம் தோற்றிய

இரவியும் மதியும் உடன்இரு புடையும -

இரவொடு பகலும் காக்கவே!

(23] ஒரு முழுமதி அதனுள்ளே நிலவும் அமுதும், முதிர்சிறுமானும்

இருப்பனபோல, முறுவல் நிலவும் மழலை அமுதும், கண் ஆகிய

மானும் இருப்பதால் ஆண்டாள் அம்மை முகம் முழுமதிக்கு

ஒப்பாகின்றது. -

குற்றமற்ற மாவடுவின்மேல் வளைந்த இருவிற்களும், வளம் மிகுந்த பிறைமதியும் திரட்டிய மேகமும் போல, நம் கோதை நாச்சியாரிடமும் கண் ஆகிய மாவடுவின்மேலே புருவமாகிய வளைந்த இருவிற்களும், நெற்றியாகிய பிறை மதியும், மலர் அணிந்த கூந்தலாகிய மேகமும் உள்ளன.(மாவடு கண்ணுக்கும் விற்கள் புருவங்களுக்கும் நெற்றிபிறைமதிக்கும் கூந்தல் மேகத்துக்கும் ஒப்பாகின்றன என்பது சாரம்)

அழகு மிகும்படி சித்தரித்த குற்றமற்ற வடிவமுடனே இமையவர்கள் பணிகின்ற திருவுருவத்தை நம்போல்பவர்க்கும் காட்டியவள்.

பண்டைத் மறைகள் தொழுகின்ற வில்லிபுத்துாரில் நமது பண்டைய தீவினைகளை ஒழித்த நண்பாட்டி(நட்பை ஆள்பவள்.).