பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் 女 71

ஏழுகடல்களும் கலங்கி அமுது எழுகின்ற கடலுள் ஆழத்திலிருந்து மந்திர மலை தோற்றுவித்த செங்கதிருயும் வெண் மதியும் ஆகிய

இருவரும் ஆண்டாள் நாச்சியாருக்கு இரு பக்கமும் இருந்து இரவும் பகலும் காப்பாற்றுக.

கலை, மலை, சிலை, விண், பண்மகள்

காலையிற் சததளக் கிரணஒண் தாமரைக்

கலைமங்கை கட்டுச்சியில், - கயிலையங் கிரியுளான் வாமபா கத்தில்உமை.

கதிரவன் குடகடல் புகு

மாலையிற் குலிசபதி அயிராணி யாமத்தில் வரிசிலை மடந்தையுடனே, -

வைகறையில் இன்இசை மடந்தைஎன்று ஒர்ஐவர்

வைகலும் காக்க: இமை யோர்

சோலையிற் காமர்வண்டினம்முரலும் நறவுஅறாத்

துணர்மல்கு பரிமளப் பைந் . . . துளவநல் தாய்பெற்ற தேன்.என்ன அமுதம்

துளித்துஎழு தரங்கநன் பால் வேலையைப் புறமிட்டு மல்லிவள நாடுபயில் வில்லிபுத் துரருள்உறையும் - விண்டுசித் தன்பெற்ற பொற்றொடி எனப்புவி

விளம்பும்ஒரு திருமகளை யே. (24) தேவர்களது கற்பகச் சோலையில் அழகிய வண்டுக்கூட்டம் இசை பாடும் தேன் அறாத துளிர் நிரம்பிய மணமுள்ள பசிய துளவமாகிய நல்ல பாற்கடலைத் துறந்து, மல்லிவள நாட்டிலுள்ள வில்லிபுத்துாரில் விரும்பி வாழ்கின்ற பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை என்று மண் கூறும் ஒரு திருமகளாகியவள் ஆண்டாள், காலையில் நூற்றிதழ்த் தாமரையில் வீற்றுள்ள கலைமகள் காக்க நடுப்பகலில் பனிமலைச் சிவன் இடப்புறத்தில் உள்ள உமை காக்க -

கதிரவன் மேலைக் கடலில் முழுகும் மாலையில் இந்திரன் மனைவி அயிராணி காக்க! யாமத்தில வரிந்த சிலைமகள் ஆகிய கொற்றவை (துர்க்கை) காக்க வைகைறையில் இசைமடந்தையாகிய பண்மகள் காக்க!

இவ்வாறு ஐந்து வேளைகளிலும் இந்த ஐவரும் காக்க: