பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

திருவிளையாடற்புராணம்

தமையனுக்கு அழைப்பு அனுப்பாமலேயே மணம் முடித்துக் கொண்டனர்.

பெண்ணைக் கொடுத்ததும் மாமனும் மருமகனும் புது உறவு கொண்டு தமையனைத் துறக்க முடிவு செய்தனர். அவனுக்குத் துரோகம் விளைவிக்க முனைந்தனர். சோழர் படை கொண்டு இராசேந்திரனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவது என அவன் தம்பியோடு உடன் பாட்டைச் செய்து கொண்டான்; சோழன் படை பாண்டிய நாட்டை நோக்கிச் சென்றது. கடல்போல் குமுறிக்கொண்டு வந்த சேனையைப் பாண்டியன் எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் சோமசுந்தரர் திருக்கோயில் முன் சென்று முறையிட்டான்.

"கவலைப்படாதே உன் படைகொண்டு அவனிடம் போரிடு; நான்வந்து உதவுகிறேன்" என்று அசரீரி வழியாக இறைவன் கூறினார். கடலில் சங்கமிக்கும் நதி எனப் பாண்டியன் சேனை எதிரியின் படைகளைச் சந்தித்தன. சோமசுந்தரரின் அருளால் பாண்டியன் படைகள் பன் மடங்காகச் சோழன் படைகளுக்குப் புலப்படும்படிச் செய்தார். இச் சேனையைக் கண்டு மலைந்துவிட்ட சோழனின் சேனைகள் சோர்ந்துவிட்டன. இரு திறத்தினரும் போர் செய்து களைத்துவிட்டனர். குடிக்கவும் நீர் இன்றி அல்லல் பட்டனர்.

சோமசுந்தரர் பாண்டியர் சேனைக்கு இடையில் தண்ணீர்ப்பந்தல் வைத்து அவர்களுக்கு மட்டும் குடிக்க நீர் தந்து உதவினர்; தனி ஒருவராக இருந்து அனைவருக்கும் நீர் உதவினார். எதிரியின் படை குடிக்க நீர் கிடைக்காமையால் போர் செய்ய முடியாமல் துவண்டு தோற்றது. காடு வெட்டியும்