பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்

113

அடைவாய்; அவன் புறமுதுகிட்டு, அவன் உயிர் தப்பி ஓடுவான். அவனைத் துரத்தும் நீ வழியில் நம்மையே நாம் பூசிக்கும் தலமாகிய திருவிடைமருதூரில் பாவச் சுமை உன்னைவிட்டு நீங்கப்பொறுவாய் பிரம்மகத்தி உன்னைத் தொடராது; புண்ணியனாய் நீ திரும்பி வருவாய்" என்று. கூறி அருளினார்.

அவ்வாறே சோழனோடு போர் இட்டு அவனைத் துரத்திக் கொண்டு காவிரி நதியை அடைந்தான். அங்கே நீர்த்துறையில் முழுகி அந்நதியின் தென் கரையில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று அக்கோயிலின் கிழக்கு வாயிலைக் கடந்து சென்றார். சென்றதும் அவனைப் பிடித்து வருத்திய பிரம்மகத்தி கோயிலின் புறத்தே அங்கேயே நின்று விட்டது. மறுபடியும் அவன் வருவான் என்று வாயிலில் காத்து இருந்தது. அவனை மேற்கு வாயில் வழியாக மதுரைக்கு வரும்படி ஆண்டவர் வாக்குக் கேட்டது. மேலைக் கோபுரத்திற்கு அரிய சில பணிகள் செய்தும், இங்கே கோயில் திருப்பணிகள் சில செய்தும், அங்கே சில நாட்கள் தங்கி இருந்து பின் மதுரை வந்து சேர்ந்தான்.

பாவம் நீங்கிய புண்ணியனாய்த் திரும்பிய அரசனுக்குப் புது ஆசை ஒன்று உண்டாகியது. புராணங்களில் சிவலோகத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறான். வாழும் போதே அந்தச் சிவ லோகத்தை ஏன் காணக் கூடாது என்ற ஆசை தோன்றியது.

இறைவனிடம் தன் ஆசையை வெளியிட்டான் அதைத் தீர்ப்பதற்கு மதுரைத் திருக்கோயிலைச் சிவ பெருமான் சிவலோகமாக நந்தியைக் கொண்டு