பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகு விற்ற படலம்

117


இசை கற்கும் பாண பத்திரனின் மாணாக்கரில் ஒருவன் யான்; அவரிடம் இசை கற்கச் செல்வதுஉண்டு. அவர் என்னைப் பார்த்து "நீ தசை எல்லாம் ஒடுங்க மூத்தாய்; இசைபாடுவதற்கு நீ இசைக்க மாட்டாய்; மூப்படைந்த நீ யாப்பமைந்த பாட்டைப் பாட இயலாது; காட்டில் விறகு தேடி எங்காவது பிழைத்துப் போ என்று என்னை அனுப்பி விட்டார். அவ்வப்பொழுது அவரிடம் கேட்டபாடல்கள் சில எனக்குப் பாடம் உண்டு; அதைப் பாடுவதும் எனக்குப் பெருமை சேர்க்கும். நான் கண்டபடி பாடுவதில்லை; நிமலனை நினைத்துத் தான் பாடுவது வழக்கம். நீலகண்டனைப் பாடுவது தான் எனக்கு வழக்கம்" என்றார்.

"நீ பாடிய பாடலைத் திரும்பப் பாட முடியுமா?" என்றார்.

"பக்க இசை இல்லை என்றாலும் தக்க குரலில் யான் பாட முடியும்" என்றார்.

"உன் பாட்டைக் கேட்டு நான் கிறுகிறுத்து விட்டேன். அதை மீண்டும் கேட்க விழைகிறேன்" என்றான்.

யாழும் அவன் உடன் கொண்டு வந்திருந்ததால் அதை மீட்டிக் குரலும் யாழும் இசையப் பாடினான்.

சுதி சேர்த்து உடல் அசைவு இன்றிக் குற்றங்கள் நீங்கிச் சித்திரப்பாவை போல் அசையாமல் சாதாரிப் பண்ணில் ஒரு பாடலைப் பாடினான்.

மலரவனும் மாலும் அறியாத மதுரை நாயகனின் மலர்ப்பதத்தைச் சிறப்பித்துப் பாடினான். இறைவன்