பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுகங்கொடுத்த படலம்

121

வந்து அவன் முன் வைத்தார். அதை ஆண்டவனால் அளித்த சன்மானம் என்று வீட்டுக்கு எடுத்துச் சென்று பொன்னையும் உயர் அணிகலன்களையும் விற்றுப் பொருளாக்கித் தானும் உண்டு. தன் சுற்றத்தாருக்கும் தந்து விருந்தினருக்கும் போட்டுச் சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் வாழ்ந்து விட்டான்.

சில நாளில் அவனுக்குச் சோதனை தர இறைவன் பொருள் கொடுப்பதை நிறுத்திவிட்டார்; எனினும் அவன் கோயிலுக்கு வந்து பாடுவதை நிறுத்தவில்லை, நித் திரையில் வந்து அவன் மனத்திரையில் இறைவன் தோன்றி "இதுவரை பாண்டியனின் பொருளைக் கொண்டு வந்து கொடுத்தோம்; பொருள் இருந்த அறையையே காலி செய்து விட்டாய்; நிறைந்திருந்த பொருள் எங்கே என்று பாண்டியன் தேடுவான்; மனம் வாடுவான்; காவலரைச் சாடுவான்; இனி எடுப்பது உகந்தது அன்று.

என் அன்பன் சேரனுக்குத் திருமுகம் தந்து அவனுக்கு உன்னை அறிமுகம் செய்கிறேன்; அவன் உனக்கு வேண்டிய செல்வம் விரும்பித் தருவான்; அதனைப் பெற்று ஊர் திரும்புக" என்று சொல்லித் திருமுகப்பாசுர ஓலையை அவன் கையில் சேர்த்து மறைந்தருளினார்.

திருமூகம் எடுத்துக் கொண்டு மலைநாடு கடந்து திருவஞ்சைக் களத்தை அடைந்து அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தலில் காத்திருந்தான். சேரனின் கனவில் இவன் வருகையை இறைவன் அறிவித்திருந்தார்.