பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

திருவிளையாடற்புராணம்


அங்கு வந்து தங்கித் தவம் செய்து உயர்பேறு பெற்றார்கள் பன்றியாகப் பிறந்தாலும் வீரத்தோடு போரிட்டு உயிர் துறந்ததால் அம்மலை சக்தி வாய்ந்ததாக விளங்கியது. 

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

பன்றி மலையில் இப்பன்னிருவரும் பிறந்து கலவைப் பிறப்பாகக் காட்சி அளித்தனர். முகம் மட்டும் பன்றி; உடம்பு அறிவு ஆற்றல் இவற்றில் மானிடராக இருந்தனர். இறைவன் முலைப்பால் குடித்ததால் தெய்வ ஞானமும் கூர்த்த அறிவும் தருமம் அறிந்து செயல்படும் திறமும் அவர்கள் பால் அமைந்தன. பாண்டியன் இராசராசன் கனவில் சோமசுந்தரக் கடவுள் தோன்றிப் பன்றிகள் பன்னிருவரையும் அமைச்சர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு அறிவித்தார். முகலட்சணம் பொருந்திய அமைச்சர்கள் இருந்த இடத்தில் அவலட்சணம் மிக்க இவர்களை அவன் அமைச்சராக்கினான்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் கூறியதற்கு ஏற்ப அவர்கள் உருவைக் கண்டு. அரசன் இகழ்ச்சி காட்டவில்லை. அவனுக்குக் கவசம் போல் இருந்து அவர்கள் காத்து வந்தனர். சாபத்தால் பன்றிக் குட்டிகள் ஆகப் பிறந்தவர்கள் இறைவன் திருவருளால் அமைச்சர்கள் ஆயினர்.

பழைய அமைச்சர்களின் குமாரிகளை இவர்களுக்குத் திருமணம் செய்வித்து அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தான். அவர்களும் இவர்களைப் பன்றி முகத்தவர் எனக்