பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

129

கொண்டு அருவெறுப்புக் காட்டவில்லை. கடவுள் அருள் பெற்றவர்கள் என்பதால் அவர்களிடம் ஞாண ஒளியும் பேரழகும் மிக்குக் காணப்பட்டன.

மனித முகங்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு இது புதுமையாக இருந்தாலும் இப்படியும் வாழ முடியும் என்ற ஒரு புதுமையைக் காணமுடிந்தது. மனிதன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பழகிய பின் இப்படிக் கலவையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு இவர்கள் உருத்தந்தார்கள். இரண்டும் கெட்ட நிலையில் அவர்கள் வாழ முடிந்தது.

மனிதர்களுள் பலர் குரங்கு முகமும் பன்றி முகமும் பெற்று இருப்பதாக எள்ளி நகையாடல் உண்டு; அது உண்மையாகவே இருந்தது என்பதற்கு ஏற்பப் புதுமையான படைப்பாகும். 

47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

இராசராசனுக்குப்பின் அவன் மகன் சுகுண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக் காலத்தில் ஒருவன் தருமங்கள் பல செய்தும் பாவம் சில செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்தான். கரிக்குருவிக்குப் பகையாகக் காகங்கள் அமைந்தன. கரிக்குருவி மிகச் சிறிய வடிவமாக இருந்ததால் காக்கையின் குத்தலுக்குத் தப்ப முடியவில்லை. அவை தலையைக் குத்திக் குத்திப் புண் ஆக்கிவிட்டன; கத்திக் கத்திப் பார்த்தும் பயன் இல்லை; தத்தித் தத்திப் பறந்து நகரத்தைவிட்டு வனத்துக்குச் சென்று தப்பிப் பிழைத்தது. அங்கே ஒரு மரத்தின்