பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கப் பலகை தந்த படலம்

139

நக்கீரர். அல்லையார் முதலிய புலவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவர். இவர்கள் ஆய்வு மன்றங்களுக்குச் சோமசுந்தரரே தலைமை வகித்தார்; இவர்கள் முன்னோர் செய்த நூல்களையே யன்றிச் சம காலத்து நூல்களையும் தரம் கண்டு பிரித்து வகைப்படுத்தினர்.

சைவம் தழைத்த மதுரையில் தமிழ் மணமும் கலந்து வீசியது. கோயில் வழிபாடுகள் மட்டும் பேசப்பட்ட அக்கோயில் வளாகத்தில் தமிழ்க் கவிதையும் இடம் கொண்டது. தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பாண்டியர்கள் தமிழ் வளர்க்க முற்பட்டனர். மதுரைத் தலவரலாற்றிலேயே இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது இதுவரை சோழரோடு பாண்டியர்கள் செய்த போர்களும் அத்தலத்தில் வழிபட்டோர் அடைந்த சிறப்புகளுமே கூறப்பட்டு வந்தன. இனிப் புலவர்களின் வரவும் தமிழ் வளர்ச்சியும் மதுரைக்குப் பெருமை சேர்க்க இச்சங்கம் பெரிதும் உதவியது என்ற செய்தியும் கூறப்படுகின்றன. 

52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்

வம்மிச சேகர பாண்டியனின் மகன் வம்மிச சூடாமணி ஆட்சிக்கு வந்தான். அவன் சண்பகப்பிரியனாக இருந்தான். அதனால் அவன் சண்பகவனம் ஒன்று அமைத்தான். அதனால் அவனுக்குச் சண்பகப் பாண்டியன் என்று சிறப்புப் பெயரும் அமைந்தது மணம் கமழும் சண்பக வனத்தில் அவ்வப்பொழுது தன் அரசமாதேவியோடு சென்று தென்றல் சுகத்தையும் பூவாசத்தையும் நுகர்வது உண்டு.

கோடையில் இளவேனிற்க காலத்தில் ஒரு நாள் வெப்பம் தாங்காது குளர்ச்சியை நுகரும் பொருட்டுத்