பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



53. கீரனைக் கரை ஏற்றிய படலம்

நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே என்று பேசிய வீரம் தமிழ்ப் புலவர்களுக்கு உள்ள பேராண்மையைக் காட்டுகிற்து

வேகத்தில் அவனை எரித்த கடவுள் நிதானத்தில் அவன் செய்தது தவறு அல்ல என்பதை உணர்ந்தார். அவன் தெய்வ நிந்தனையாக எதுவும் கூறவில்லை. உள்ளதை உள்ளவாறு கூறும் புலவன் அவன் என்பதை அவர் உணர்ந்து அவனை மன்னித்தார். கவிதையில் இயல்பு நவிற்சியே தேவைப்படுவது. உயர்வு நவிற்சி கூடாது என்பதை அவன் உணர்த்தினான் என்பதையும் அறிந்தார்.

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்"

என்று பாடிய பாரதியின் குரல் அவன் பேச்சில் ஒலித்தது. தமிழினத்துக்கு ஒரு பண்பாடு உண்டு. அச்சமில்லாமல் உண்மையை உலகுக்கு உணர்த்தும் வீரம் அது. அதனால் நக்கீரனைத் தமிழகம் என்றும் போற்றி வருகிறது. நக்கீரன் அஞ்சாமையின் உருவகம்.

அத்தகைய நக்கீரனை இழந்து சங்க மண்டபம் பங்க முற்றது கண்டு புலவர்கள் வருந்தினர். நிலவு இல்லாத வானத்தைப் போலவும், ஞானமில்லாத கல்வி போலவும் அச்சங்கம் இருந்தது. சோமசுந்தரரிடம் புலவர் அனைவரும் சென்று மன்றாடினர். கீரனின் சொல்லில் கீறல் விழுந்து விட்டது. கல்விச் செருக்கால் உம்மை எதிர்த்துக்