பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

திருவிளையாடற்புராணம்

குறுக்கே பேசி விட்டான்; பாதை பிறழ்ந்து விட்டது; கவிதையில் குற்றம் காணவேண்டியவன் இறைவியின் கூந்தலைப் பற்றி ஆராய்ந்தது தவறுதான்; மன்னிக்க வேண்டுகிறோம்' என்று முறையிட்டனர்.

புலவர்களின் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நக்கீரனும் இறைவனின்புகழைப்க்பாடிகைலைபா, காளத்திபாதி அந்தாதி, பெருந்தேவ பாணி, திருவெழு கூற்றிருக்கை, முதலிய நூல்களைப்பாடினார். மாபெரும் புலவனை மன்னிப்பதை முதற்கடமையாகக் கொண்டு சினந் தணிந்து மீண்டும் அவனைச் சங்கப்புலவராக ஏற்றுக் கொண்டார். 

54. கீரனுக்கு உபதேசித்த படலம்

செருக்குமிக்க புலவனாகிய நக்கீரன் தமிழிலக்கியம் கற்றவன்;ஆனால் பொருள் இலக்கணம், முழுவதும் கற்றிலன். தமிழ் மொழிக்கு எழுத்து, சொல் இவற்றிற்கேயன்றிப் பொருளுக்கும் இலக்கணம் உண்டு என்பதை மறந்து விட்டான்; அதை அவன் சரியாக அறியவில்லை என்பது தெரியவந்தது.

வழு நிலை, வழா நிலை, வழு அமைதி என்ற மூன்று நிலைகள் உண்டு. வழு நிலை என்பது தவறாகக் கூறுதல் என்பதாகும். பானை உடைந்தது என்று கூற வேண்டியதைப் பானை உடைந்தான் என்று கூறுவது வழு நிலையாகும். இது பிழை பட்ட தொடராகும்.

பாவை வந்தாள்; பூங்கொடி வந்தாள் என்பவை பாவை போன்றவள் வந்தாள், பூங்கொடி போன்றவள் வந்தாள் என்று பொருள் தருவனவாகும். இவை உயர்திணை முடிவு கொண்டது வழு எனவும் அவை