பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

153


'அவர்கள் பால் நீ இரக்கம் காட்டமுடியவில்லை; அதனால் ஏற்பட்ட அந்தப்பிணக்கு தீர்ந்தது; இனி இடைக்காரரிடம் மன்னிப்புப் பெறுக" என்று சொல்லி அனுப்பினார். குலேசபாண்டியனும் நடந்ததை லேசாகஎடுத்துக்கொண்டு பூவும் சந்தனமும் கொண்டு புலவரின் விலாசம் அறிந்து அவரைச் சந்தித்து மதித்துப் பொருளும் பொன்னும் தந்து அவரைப் பாராட்டி அவரோடு நல்லுறவு கொண்டான். சங்கம் மறுபடியும் மதுரை வந்து அடைந்தது. 

57. வலை வீசின படலம்

உத்தர ஆலவாயில் மீனாட்சி அம்மையோடு தனித்து இருந்த போது சுந்தரர் வேதப் பொருளை எடுத்து விளம்பினார். அம்மையாரின்மனம் அதில் ஈடுபாடு பெறாமல் இருந்தது. அன்பு மொழி பேச வேண்டிய தனிமையில் கனமான பொருளைப் பேசியதால் பார்வதி அம்மையார் பராமுகமாக இருந்து விட்டார்.

வேதப் பொருளை உதாசீனம் செய்ததால் மீனவப் பெண்ணாகப் பிறக்க என்று சபித்து விட்டார். விமோசனம் பற்றிய விசனம் எழுந்தது. தாமே வந்து உமையாரை மணப்பதாக உறுதி தந்தார். அப்பொழுது அங்கு மீண்டும் வேதம் கேட்டு ஏதம் நீங்கலாம் என்று விதித்தார்.

இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? முருகனும் விநாயகனும் வேத புத்தகங்களை ஓதம் மிக்க கடலில் தூக்கி வீசி எறிந்தனர்; இந்த