பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

திருவிளையாடற்புராணம்


"நான் யார் என் உள்ளம் யார்" என்ற ஆய்வில் இருந்தவர்; தான் ஒரு அமைச்சர், குதிரை வாங்க வந்த பொருளைத் தொலைத்த குற்றவாளி என்பதை உணர ஆரம்பித்தார். அரசன் ஆணை அவரை அச்சுறுத்தியது. எனினும் இறைவன் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.

"திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவனிடம் முறையிட்டார். குதிரை வாங்குதற்குரிய பொருள் உனக்கே செலவிட்டேன்;நீ குதிரையைக் கொண்டு வருவது உன்கடமை" என்று விண்ணப்பித்தார். "குதிரை வரும்; நீ கவலைப் படாமல் மதுரை போ" என்று இறைவன் குரல் கேட்டது.

நகர் வந்ததும் அரசனிடம் உறுதியாகக் குதிரைகள் வரும் என்று உறுதி அளித்தார். அரசனும் ஆவலாகத் காத்திருந்தான்.எனினும்அவன் நெருங்கிய சுற்றத்தினருக்கு அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் இருந்தது. 

59. நரி பரியாக்கிய படலம்

ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓடி அரசனிடம் உரையுங்கள் என்று சொல்லப் படைத் தலைவர்களை வாதவூரர் அனுப்பிவைத்தார். அதே சமயத்தில் கோடிப் பொன் கொண்டு கோயிற் பணி செய்து அழித்ததையும் அவர்கள் சென்று உரைத்தனர்' அரசன் அவசரப்பட்டு ஆவேசம் கொள்ளாமல் அவர்குறிப்பிட்ட மாதம் ஆடி வரை உரையாடாமல் காத்திருந்தான்.

ஆடி இறுதியில் மாணிக்க வாசகரை அழைத்துப் பாண்டிய அரசன் "இனிக்குதிரைகள் எப்பொழுதுவரும்?"