பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

171


அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பர். பாண்டியர்கள் தொடர்ந்து இதுவரை சைவ சமயத்தையே தழுவி வந்தனர். இவன் ஒருவன் மட்டும் விதி விலக்கானான்; சமண மதத்தில் அவன் ஈடுபாடு காட்டினான்.

மங்கையர்க்கரசியார் அறிவும் ஆற்றலும் மிக்கவர்; சைவ சமய ஈடுபாடும் சோமசுந்தரரின் வழிபாடும் கொண்டவராக விளங்கினார். குலச்சிறையாரும் சைவ சமய வளர்ச்சியில் அக்கரை காட்டினார்.

அரசன் சமண சமயத்தைத் தழுவியதால் நாட்டு மக்களும் மதம் மாறுவர் என்ற அச்சம் அரசியாருக்கு ஏற்பட்டது. அரசனைத் திருத்தி வழிப்படுத்த அவள் முனைந்தாள் வெற்றி பெறவில்லை சோமசுந்தரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் தம் கணவனைச் சமயம் மாறும்படி உதவ வேண்டினாள். அப்பொழுது அங்கே சீர்காழியிலிருந்து வந்த பிராமணர் ஒருவர் சோம சுந்தரரைத் தரிசிக்க வந்திருந்தார். அப்புதியவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் ஊர் செய்திச் சிறப்புகள் குறித்து மங்கையர்க்கரசியார் விசாரித்தார்.

"சீர்காழி" என்றான் அவன்.

"அங்குச் சிறப்புச் செய்தி உளதோ?" என்றாள்.

"சீர்காழியில் சிவபாத இருதயர் என்னும் அந்தணருக்கு ஞான சம்பந்தர் என்னும் அருட் செல்வர் மகனாகத் தோன்றியுள்ளார். மூன்றாம் வயதிலேயே உமை தந்த பாலை உண்டு ஞானம் பெற்றார். தேவார இன்னிசைப் பாடல்களைத் தலந்தோறும் சென்று வழிபட்டு வருகின்றார். அவர் வயதில் இளைஞர்; அறிவில் முதிர்ந்தவர்;