பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

திருவிளையாடற்புராணம்


வது போல இருந்தது; குளிர்வதற்கு மாறாக நோய் தளிர்த்தது. அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். அடுத்தது வலப்பக்கம், திரு நீறு இட்டதும் தொட்டபகுதி யெல்லாம் குளிர்ந்து நோய் தீர்ந்தது. இடப்பக்கமும் அவரையே தீர்க்க வேண்டி அரசன் வேண்டினான்.

வெப்பு நோய் நீங்கி ஞானசம்பந்தர் செப்பும் சைவத்தின் மேன்மையை ஒப்புக் கொண்டான். வெப்பு நோயோடு அவனுக்கு முன் இருந்த வளைவு ஆகிய கூனும் தீர்ந்து நிமிர்ந்து நின்றான். எழில்படைத்த மேனியைப் பெற்றான். கூன் பாண்டியன் என்ற பெயர் மறைந்து அழகன் என்ற பொருளுடைய சவுந்தர பாண்டியன் என்ற பெயர் வழங்கத் தொடங்கியது. சைவத்தைத் தழுவிக் கொண்டு முழுச் சைவனாக மாறினான். 

63. சமணரைக் கழுவேற்றிய படலம்

கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த அற்புதம் பெரிய மாற்றத்தை விளைவித்தது; பாண்டியனின் உடல் நோயும் தீர்ந்தது; மன இருளும் அகன்றது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அதனைத் தொடர்ந்து சமண சமயத்தை ஒழித்துச் சைவ சமயத்தை நிலை நாட்ட முயன்றனர். சமண சமயம் மக்களையும் மன்னனையும் இறுகப் பிடித்து இருந்த அப்பிடிப்பினை அகற்றிச் சமணருக்கு சிறந்தபடிப்பினையைப் புகட்ட விரும்பினார்.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருஞான சம்பந்தரை அணுகிச் சைவ சமயத்தை நிலை நாட்ட அதன் தத்துவங்களையும் கொள்கைகளையும் பரப்ப உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களோடு