பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

திருவிளையாடற்புராணம்

முத்தர் மனம் இறைவனிடம் இருக்கவேண்டும். என்பது உண்மை தான். அதனால் அவர்கள் சோம்பலும் மறதியும் கொண்டு தத்தமக்கு விதித்த கடமைகளினின்று ஒதுங்குவதை யான் விரும்பமாட்டேன். உலகத்தில் அறநெறி தவறாது செயலாற்றுவதையே யான் விரும்புகிறேன். ஆண்டு முழுவதும் இங்கே இருந்து நீ பூசை செய்வது. புனலில் மூழ்குவது, புண்ணியம் தேடுவது, என்று இருக்கத் தேவை இல்லை. நீ இருக்கும் பதவி உயர் பதவி; தேவர் தலைவன்; நீ தலைமை தாங்கிநடத்த வேண்டிய கடமைகள் பல உள்ளன. அனுபவிக்கும் இன்பங்களும் உள்ளன, அவற்றை விட்டு விட்டுத் தவயோகிகளைப் போல இங்கே இருக்க வேண்டாம்; ஆண்டுக்கு ஒரு நாள் இங்கு வந்து போனால் போதும். ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலம் சித்திரைத் திங்களில், சித்திரை பூரண நிலவு நாளில் வந்து போ; அது போதும், இந்நாள் உனக்காக ஒதுக்கி வைக்கிறேன். பக்த கோடிகள் பலரும் வருவர்; அவர்களுக்கும் இடம் வேண்டும்; மற்றைய நாள்களை அவர்களுக்குரிய நாளாக ஒதுக்கி வைக்கிறேன். 'வருக' என்று சொல்லி விடை தந்து அனுப்பினார். பதவி என்பது கடமை செய்வதற்கே அன்றி அதிக மோகம் கொண்டு உழல்வதற்கு அல்ல; பிரம பதம்விஷ்ணுபதம் இவற்றை எல்லாம் கண்டு நீ ஆசை கொள்ளாதே, மனம் மாசு நீங்கி நிராசையோடு எம்யை வந்து அடையும் போது உனக்கு நிரந்தரமான நித்ய வாழ்க்கையைத் தருவோம்" என்று கூறி வாழ்த்தி அனுப்பினார்.

மண்ணுலகம் பாவங்களைப் போக்கும் கொல்லன் உலைக்களமாக விளங்குகிறது. தெய்வ வழிபாடுகளும், தரும சிந்தனைகளும், அறக் கோட்பாடுகளும், மனிதர்களுக்கு உயர்வு அளிக்கின்றன. சொக்க நாதன் ஆகிய சோமசுந்தரக் கடவுளிடம் நீங்காத அன்பு கொண்டு