பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்



எனவரும் திருக்களிற்றும்படியார் 96- ஆம் பாடலில் குறித்துள்ளமை காணலாம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தமக்கு மெய்யுணர்வளித்த ஞானாசிரியர் ஆளுடைய தேவநாயனாரை “ஆளுடையானே” எனவும், அவர் தமக்கு ஞானாசிரியராய் எழுந்தருளி மெய்யுணர்வு நல்கிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றியருளிய திருவுந்தியாரைத் தமக்க உபதேசித்தருளி வையமுழுதும் மலக்கயங் காணத் தம்மை உய்யக்கொண்டருளிய பேரருட்டிறத்தினை “திருவியலூராளுஞ் சிவயோகி வந்து இன்று என் வருவிசையை மாற்றினான்” எனவும் கூறியுள்ளமை இங்கு இணைத்து நோக்கத்தகுவதாகும்.


நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

திருச்சிற்றம்பலம்

உய்யவந்த தேவநாயனார் திருவடி வாழ்க