பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருவெம்பாவை விளக்கம்

வெள்ளம் நிறைந்தது என்று நயமாக மாணிக்கவாசகர் சொல்லுகின்றார்.

வண்டு பாடின எனுங் குறிப்பால் இறைவன் அடியா களும், அவன் பொருள் சேர் புகழை இன்பத்தோடு பாடி நின்றனர் எனும் கருத்துப் புலப்பட்டமை காணத்தக்கது.

இவ்வாறு குறிப்பிட்டு, பள்ளியினின்றும் எழுந்தருளு

மாறு வேண்டினர் என்பதாம்.

அருணன் இந் திரன்திசை

அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம்கின்

மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன்

எழஎழ, கயனக் கடிமலர் மலரமற்

றண்ணல் அங் கண்ணாம் திரள்கிரை அறுபதம்

முரல்வன; இவையோர்;

திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே!

அருள்நிதி தரவரும்

ஆனந்த மலையே!

அலைகடலே! பள்ளி

எழுந்தரு ளாயே!